பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
coimbotore: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம், பணிகளை புறக்கணித்து போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை வெளியிட வேண்டும், பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதன் படி, இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாலுகா அலுவலகங்களில் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“