மாடு மிரண்டதால் விபத்து: கணவன் கண் முன் மனைவி மரணம்; சி.சி டி.வி காட்சிகள்

மாடு மிரண்டதால் எதிர் சாலைக்கு திரும்பிய மாட்டுவண்டி ஏற்படுத்திய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.

மாடு மிரண்டதால் எதிர் சாலைக்கு திரும்பிய மாட்டுவண்டி ஏற்படுத்திய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore road Accident, caused by cow: Wife dies in front of husband; CCTV footage Tamil News

Coimbatore road Accident

கோவை - பி.ரஹ்மான்.

கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ் புவனேஸ்வரி (25) தம்பதியினர். இவர்கள் நேற்று மாலை வண்டிக்காரனூர் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது இவர்களுக்கு முன் மாட்டு வண்டி (ரேக்ளா வண்டி) ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது.

Advertisment

இந்நிலையில், மாடு திடீரென மிரண்டு எதிர் சாலைக்கு திரும்பியதால் பின்னால் வந்த இவர்களது வாகனம் அந்த மாட்டுவண்டியின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பிரகாஷ் மற்றும் புவனேஸ்வரி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அதேசமயம், எதிர் சாலையில் வந்த இருசக்கர வாகனம் ஒன்றும் விபத்துள்ளானது. இதில் புவனேஸ்வரிக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அடுத்து தனியார் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த ஆம்புலன்ஸ், புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இது குறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்காட்சிகள் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் சிசிடிவி யில் பதிவாகி உள்ளது.

கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Coimbatore Tamilnadu Road Accident

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: