scorecardresearch

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடி கால் உடைந்த நிலையில் கைது

பார்த்த சாரதியை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Coimbatore
Coimbatore Rowdy Arrest

கோவை ரத்தினபுரி பகுதியில் காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடி,போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.

கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

இதை அடுத்து கோவை பந்தய சாலை காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி தலைமையிலான போலீசார் ரவுடி பார்த்தசாரதி கைது செய்ய முற்பட்டபோது அவர் காவல் துறையினரிடமிருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளார். அப்போது காவல் துறையினரும் அவரை விரட்டி சென்ற நிலையில் ரத்தினபுரி அடுத்த ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து பார்த்தசாரதி கீழே குதித்து தப்ப முயன்ற போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து எழுந்து நிற்க முடியாமல் இருந்த ரவுடி பார்த்த சாரதியை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore rowdy jumped off the bridge to escape arrest by police