கேரளா எர்ணாகுளம் பகுதி கல்லடா பெயர் கொண்ட ஆம்னி பஸ் புதன்கிழமை சென்னையில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம் செல்கிறது.
இந்த பேருந்தை இன்று காலை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் (ஆர்.டி.ஓ) காந்திபுரம் பகுதியில் பறிமுதல் செய்து உள்ளனர்.
இதுகுறித்து ஆம்னி பேருந்து நிர்வாகி கூறியதாவது:
எங்களிடம் உச்ச நீதிமன்ற உத்தரவு இருக்கிறது மேலும் கணியூர் டோல்கேட்டில் இருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் (ஆர்.டி.ஓ) இந்த வாகனத்தை பிடித்தார்கள் பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர்.
குறிப்பாக சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றக் கூடாது வெளி மாநிலங்கள் இருந்து தான் பயணிகளை ஏற்ற வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்.
உச்சநீதிமன்ற அறிவுரை உள்ளது எனக் கூறியும் எதுவும் பேசாமல் வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் (ஆர்.டி.ஓ) எடுத்துச் செல்லுங்கள் என தெரிவித்தனர் என கூறப்படுகின்றது.
குறிப்பாக பயணிகள் தற்பொழுது தமிழ்நாடு பதிவு கொண்ட வாகனத்தில் பயணம் செய்து வருகிறார்கள் இதனால் எங்கள் வருமானம் கேள்விக்குறியாகி உள்ளது என ஆம்னி பேருந்து நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“