கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டியில் சகாரா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் வீட்டுமனைகளை வீற்றிருக்கின்றது. பேரூராட்சியாக இருந்தபோது கடந்த 2009 காலகட்டத்தில் 10 :5 ஏக்கர் பரப்பளவிலான பூமியில் வீட்டுமனை பிரித்துள்ளனர். இதில் ஓ.எஸ்.ஆர் என்று சொல்லப்படும் ஓபன் ஸ்பேஸ் ரிசர்வ் சைட் 10.5 ஏக்கர் ஒதுக்கப்பட்டது.
இதனை மாநகராட்சிக்கு சொந்தமாக ஒப்படைக்கப்பட்டது. இந்த பகுதி பின்னாளில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு நான்காவது வார்டாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையிலே சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் மாநகராட்சிக்கு சொந்தமாக ஒப்படைக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். சரவணம்பட்டி பகுதியில் சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆக்கிரமிப்பு தெரிய வந்தன.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மற்றும் 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேலுசாமி இது குறித்த, முறைகேடான ஆக்கிரமிப்பு பூமிக்கான ஆவணங்களை திரட்டி இருக்கின்றார். இதனை உயர் அதிகாரிகளும் ஒப்படைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஆணை பெற்றிருக்கின்றார். அதன் அடிப்படையில் சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் ஆக்கிரமித்து வைத்திருந்த 200 கோடி மதிப்பிலான 10.5 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
அதில் சகாரா சிட்டி டெவலப்பர்ஸ் போடப்பட்டிருந்த நிலையில் உடமைகள் அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி வடக்கு மண்டல உதவி நகர அமைப்பு அலுவலர் சத்தியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“