பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சங்கரை, கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து, கோவை அழைத்து வருகின்றனர்.
அரசியல் விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் திமுக அரசின் செயல்பாடுகளையும், மு.க.ஸ்டாலின், உதயநிதியை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சவுக்கு சங்கரை விசாரணைக்காக கோவை அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் காவல் துறை வாகனம் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் கோவைக்கு மாற்று வாகனத்தில் அழைத்து சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“