கோவையில் பட்டியல் இன இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டணை, 2 பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தாமரைக்கண்ணன் என்ற பட்டியல் இன இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தாமரைக்கண்ணன் என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞரை 14-பேர் அடித்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் இன்று (ஜூலை 15) தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேரில் விஜய் என்பவர் விடுதலை செய்யப்பட்டார். ஜெயசிங் என்பவர் வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது உயிரிழந்தார்.
விக்கி, மகேந்திரன், கார்த்திக், கவாஸ்கான், சுரேஷ், பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைப்பெற்ற தாமரைக்கண்ணன் என்பவரின் கொலை வழக்கில் நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார் .
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 147, 148, 452, 307, 302 IPC & 3(2) (V,a) SC/ ST POA சட்டம் 2015 உள்ளிட்ட பிரிவின் கிழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தண்டனை விவரம் வருமாறு:
1.தல விக்கி - இரட்டை ஆயுள் தண்டனை
2.தோப்பு மகேந்திரன் - இரட்டை ஆயுள் தண்டனை
3.கார்த்திக் என்கிற டிப்ஸ் கார்த்திக் - இரட்டை ஆயுள் தண்டனை
4.கவாஸ்கான் - இரட்டை ஆயுள் தண்டனை
5.ஜெய்சிங் (இறந்தார்)
6.சுரேஷ் என்கிற வால் சுரேஷ் - இரட்டை ஆயுள் தண்டனை
7.பிரகாஷ் - இரட்டை தண்டனை
8.நவீன் என்கிற நந்து நவீன் - இரட்டை ஆயுள் தண்டனை
9.கௌதம் என்கிற கருப்பு கௌதம் - ஆயுள் தண்டனை + ரூ5000 அபராதம்
10.விமல் - இரட்டை ஆயுள் தண்டனை
11.விஜய்- (விடுதலை- 15.07.24)- C4 HS-04/2020-
12.சைமன் கிறிஸ்டோபர் - ஆயுள் தண்டனை+ ரூ5000 அபராதம்
13.கௌதம் என்கிற ஒன்றை கௌதம் - இரட்டை ஆயுள் தண்டனை
14.கண்ணாச்சி என்கிற கலைவாணன் - இரட்டை ஆயுள் தண்டனை