New Update
/indian-express-tamil/media/media_files/UkrZHyWIAJKNwjHoscTR.jpg)
Coimbatore
புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவரது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Coimbatore
கோவையில், சாய்பாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை நேற்று (மார்ச் 18) பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட வாகனப் பேரணி நடந்தது.
பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள் குவிந்து மலர் தூவி வரவேற்றனர். செல்லும் வழியில், நாதஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க அரசு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
We have taken cognisance of the matter are inquiring into it. ARO has sought reports from Chief education officer and Joint commissioner, Labour department. Suitable action will be taken based on the findings of the inquiry. https://t.co/B7TUaFZCdv
— District Collector, Coimbatore (@CollectorCbe) March 19, 2024
அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவரது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தொழிலாளர் துறை இணை ஆணையர் ஆகியோரிடம் அறிக்கை கேட்கப்பட்டு இருப்பதாகவும் விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.