வக்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கையில் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கையில் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore SDPI protest against Waqf Amendment Bill Parliament Tamil News

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கையில் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவதாகும். இது அசையும் சொத்தாகவோ அல்லது அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது போன்ற வக்பு  வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த திருத்த மசோதா மக்களவையில் இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று இரவு எட்டு மணிக்கு கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி எதிரில்  மெழுகு வர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 300 - க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Advertisment
Advertisements

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Coimbatore waqf board bill

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: