Coimbatore News in Tamil | கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியினர், அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் மனு அளித்தனர். கட்சி நிர்வாகிகளுடன் வந்த அவர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்து நன்றி தெரிவித்து சென்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெல்லை முபாரக் கூறியதாவது:-
SDPI சார்பில் கோவை மாவட்டதில் அமைதி நில நடவடிக்கைகளை எடுக்க கோரியும், கட்சி சார்பில் அனைத்து ஒத்துழைப்பு கொடுப்போம் என கூறி வந்துள்ளோம்.
சமீபத்தில் நடந்த அசம்பாவிதங்களை SDPI கண்டிக்கிறது. விசாரணையின் போது அப்பாவிகள் பாதிக்கப்பட கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம். அப்பாவிகளை அலைக்கலிக்க கூடாது மற்றும் ஒரு சமூகம் சார்ந்து விசாரணை செல்லக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளோம்.
சமூக நல்லிணக்கத்திற்கு மங்களூர் சம்பவமும் ஒரு அச்சுறுத்தல். மத மொழி பார பட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் அவசியமில்லை.
விளம்பர மேனியா நோயால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் ஒரு இணை அரசாங்கம் நடத்த நினைக்கிறார். தமிழ்நாட்டிற்கு ஆளுநர் நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் தமிழகத்தை வெளியேற வேண்டும்.
மக்கள் ஆதரவை பெற முடியாதவர்கள் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மூலம் தமிழகத்தில் நுழைய நினைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வட மாநிலங்களில் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளன. என்.ஐ.ஏ (NIA) என்ற பெயரில் சிறுபான்மையினரை குற்றப்பரம்பரை ஆக்க பார்க்கிறார்கள்.
இவ்வாறு SDPI கட்சியினர் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.