Advertisment

கோவை செம்மொழிப் பூங்கா பணி எப்போது முடிவடையும்? சட்டமன்ற உறுதிமொழி குழு இன்று நேரில் ஆய்வு

காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்கா கட்டும் பணிகளை முதலில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவை மாவட்டத்தில் எம்.எல்.ஏ. வேல்முருகன் தலைமையில், சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்கா கட்டும் பணிகளை முதலில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேல்முருகன், ‘தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படுகின்ற மக்கள் நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம்.

கோவையில் மொத்தம் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அங்குள்ள சிறைச்சாலையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்தவுடன் முழுமையாக 165 ஏக்கரில் பணிகள் நடைபெறும்.

தற்போது  முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்காவிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மே 25ம் தேதிக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காவலர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணி, அரசு மருத்துவமனையில் நடைபெறும் பணிகள், மேற்கு புறவழிச்சாலை நடைபெறும் பணிகள், பாரதியார் பல்கலை கழகம், மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட இருக்கிறோம், எனத் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment