Advertisment

இதுவரை ஒரு தேர்தலை கூட மிஸ் பண்ணவே இல்லை: கோவையில் வாக்களித்த 104 வயது பெரியவர்

கோவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 64.42% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. சட்டமன்ற தொகுதிகள் விவரம் வருமாறு:

author-image
WebDesk
New Update
Covai vote 1

ஜனநாயக கடமையை நிறைவேற்ற  104 வயது முதியவர் தனது மகன் மற்றும் பேரன் கொள்ளு பேரன்களுடன் வந்து வாக்களித்தார். கோவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 64.42% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜனநாயக கடமையை நிறைவேற்ற  104 வயது முதியவர் தனது மகன் மற்றும் பேரன் கொள்ளு பேரன்களுடன் வந்து வாக்களித்தார்.

Advertisment

18-வது மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றுது. 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் நின்று வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது மேலும், வாக்களிக்க வாக்கு சாவடிக்கு வர இயலாத முதியவர்களின் இல்லத்திற்கே சென்று தபால் வாக்கை பெற்றது

இந்நிலையில், கோவை மக்களவை தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற  104 வயது முதியவர் தனது மகன் மற்றும் பேரன் கொள்ளு பேரன்களுடன் வந்து வாக்களித்துள்ளார்.

கோவை மாவட்டம், கணியூர் அடுத்த ஊஞ்சபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி  கணபதி கவுண்டர், இவர் தனது 104 வது வயதில் மகள், பேரன், கொள்ளு பேரன்களுடன் வந்து கோவை மக்களவைத் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

முன்னதாக வீட்டில் இருந்து காரில் வந்த கணபதி வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்தது அங்கிருந்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. 

தான் 21-வயதில் இருந்து வாக்களித்து வருவதாகவும் இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்க தவறியது இல்லை வெளியூர் சென்றிருந்தாலும் வாக்குப்பதிவு அன்று வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளதாகவும் அனைவரும் வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென கணபதி வேண்டுகோள் விடுத்தார்.

கோவை மக்களவைத் தொகுதியில் 64.42% வாக்குப்பதிவு

2024 மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கோவை மக்களவைத் தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடன்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கோவை மக்களவைத் தொகுதியில் 2059 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு சதவிகிதம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கோவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 64.42% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. சட்டமன்ற தொகுதிகள் விவரங்களின்படி சூலூர் சட்டமன்ற தொகுதியில் 75.33%, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 66.42%, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் 58.74%, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 59.25%, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 59.33%, பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 67.42% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

கோவை, தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் கோவை மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைந்தை ஒட்டி வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. தேர்தல் அதிகாரி முன்னிலை சீல் வைத்த பிறகு, காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினருடன் கோவை தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி அரசு கல்லூரிக்கு எடுத்துச் செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment