Advertisment

2 மாதத்தில் 6 முறை சர்வீஸ்: வாங்கிய கடையிலே பைக்கை விட்டு சென்ற வாடிக்கையாளர்

கோவை சுகுணா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வாங்கிய பைக் இரண்டு மாதத்தில் ஆறு முறை சர்வீஸ் செய்யப்பட்டும் சரியாக இயங்காததால் கடுப்பான வாடிக்கையாளர் பைக்கை கடையிலே விட்டு சென்றார்.

author-image
WebDesk
New Update
Coimbatore Service 6 times in 2 months Customer leave bike at shop Tamil News

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தால் தனது மகன் பைக்கை தீயிட்டு கொளுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதால், பைக்கை சுகுணா ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

coimbatore: கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த சாகீர் மகன் இப்ரான் (வயது 27). இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். தனது மகன் இப்ரானுக்கு பிடித்த 1 லட்சம் 98 ஆயிரம் மதிப்புள்ள ஹீரோ எக்ஸ் பிளஸ் (Hero X Pluse) பைக்கை கோவை அவிநாசி சாலை வ.உ.சி பூங்கா அருகே உள்ள சுகுணா ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆசை ஆசையாய் கடந்த செப்டமர் மாதம் வாங்கி கொடுத்துள்ளார்.

Advertisment

பைக் வாங்கி இரண்டரை மாதங்கள் ஆகிய நிலையில் பைக் இன்ஜினில் ஆயில் கசிவு ஏற்பட்டு உள்ளது .பைக் எடுத்து தற்போது வரை வெறும் 1100 கிலோ மீட்டர் மட்டுமே ஓட்டப்பட்டுள்ளது. இதனை பலமுறை சுகுணா ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாடிக்கையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பைக் எடுத்து ஆறு முறை ஆயில் கசிந்து கொண்டே இருப்பதாக ஆறு முறையும் சர்வீஸ் செய்துள்ளனர். ஒவ்வொரு 200 கிலோமீட்டர் ஓட்டும் போது பைக்கில் இருந்து ஆயில் கசிந்து கொண்டு இருக்கிறது என வாடிக்கையாளர் கூறினார்.

இதேபோல் ஹீரோ எக்ஸ் பிளஸ் பைக் எடுக்கும் போது 45 கிலோமீட்டர் மைலேஜ் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது வெறும் 20 முதல் 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் வருவதாக வாடிக்கையாளர் வேதனையும் தெரிவித்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தால் தனது மகன் பைக்கை தீயிட்டு கொளுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதால், பைக்கை சுகுணா ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். இது குறித்து சுகுணா மோட்டார் நிர்வாகத்திடமும் மற்றும் ஹீரோ தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுத்து வில்லை என்று மன உளைச்சலுக்கு வாடிக்கையாளர் ஆளாகி இருக்கின்றார்.

தனது மகனுக்கு ஆசை ஆசையாய் வாங்கிய பைக்கில் பிரச்சனை ஏற்பட்டு அதற்கு தீர்வு கிடைக்காததால் மனம் நொந்து போன சாகீர் தனக்கு பைக் வேண்டாம் என்று சுகுணா ஹீரோ மோட்டார் நிறுவனத்தில் வாகனத்தை விட்டு விட்டுச் சென்று விட்டார். சுகுணா ஹீரோ நிறுவனத்தில் சர்வீஸ் மேலாளர் செந்தில் குமார் வாடிக்கையாளரிடம் கெஞ்சியும் அதனை மறுத்துவிட்டு பைக் வேண்டாம் என்று கூறி அங்கிருந்து சென்றார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment