scorecardresearch

கோவை – சீரடி நாளை முதல் தனியார் ரயில்; டிக்கெட் கட்டணத்தைப் பார்த்து மக்கள் ஷாக்

Coimbatore to Shirdi Train ticket price increased; கோவையிலிருந்து சீரடிக்கு நாளை முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் டிக்கெட் கட்டணம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கோவை – சீரடி நாளை முதல் தனியார் ரயில்; டிக்கெட் கட்டணத்தைப் பார்த்து மக்கள் ஷாக்
Coimbatore-Shirdi Train ticket

Coimbatore to Shirdi Train , கோவையிலிருந்து சீரடிக்கு நாளை முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் டிக்கெட் கட்டணம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஷீரடிக்கு 5 நகரங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு பிரதமர் மோடியின் ‘பாரத் கௌரவ்’ என்ற திட்டத்தின் கீழ் ரயில்வே துறை அனுமதி அளித்தது. அதில் கோவையும் இடம்பெற்றது.

இந்நிலையில் நாளை அதாவது  ஜூன் 14 மாலை 6 மணியளவில் வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயிலை கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார்  நிறுவனம் இயக்கவுள்ளது.

கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் ரூ. 1,280 . ஆனால் தனியார் நிறுவனம் வசூலிப்பது ரூ.2500 . மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.2,360 ஆனால் தனியார் கட்டணம் ரூ. 5000.

குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.4,820 ஆனால், தனியார் கட்டணம் ரூ.7000 . குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190 அனால் தனியார் கட்டணம் ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore shirdi train ticket price doubled

Best of Express