கோவை மாவட்டம், சூலூர் அருகே ஜெய் கிருஷ்ணா மாருதி ஷோரூம் அண்ட் சர்வீஸ் நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை திடீரென நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து சேதம் ஆனது.
சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் திருச்சி சாலையில் ஜெய்கிருஷ்ணா மாருதி ஷோரூம் சொந்தமான புதிய கார் விற்பனை மற்றும் பழைய கார்கள் பழுது நீக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென பரவி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு பரவியது.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிவோர் முதல் கட்டமாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து விழுந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கு மேற்பட்ட கார்கள் தீயில் கருகி சேதமானது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஷோரூம்க்குள் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கார்கள் ஊழியர்கள் அப்புறப்படுத்தி பாதுகாத்தனர்.
கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜ் கோபால் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். சூலூர் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திருச்சி சாலை பகுதியில் போக்குவரத்தை மாற்றி அந்த வழியை ஒரு வழி பாதையாக மாற்றினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தீ விபத்துக்கான காரணமோ, சேத விபரங்களோ தெரியவில்லை.
தீ விபத்துக்கான காணம் குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இரவு நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாத காரணத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீயினால் கட்டடம் இடிந்து விழுந்ததில் குடியிருப்புப் பகுதியில் வாசிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்டத“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“