/indian-express-tamil/media/media_files/pCNk5qXwDg6qc70irXHj.jpeg)
Coimbatore
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோவை கிளை சார்பில்கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிய நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனத்திற்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே உடனடியாக பணி நியமன நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று முதல் ஐந்தாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை கல்லூரியில் கையெழுத்து இயக்கம்கோவை மாவட்ட கிளை சார்பில் நடைபெற்றது.இதில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலரும் கையெழுத்திட்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.