/indian-express-tamil/media/media_files/2025/09/03/coimbatore-singanallur-kr-jayaram-edappadi-k-palaniswami-invitation-bullock-cart-tamil-news-2025-09-03-16-27-22.jpg)
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏறு பூட்டிய மாட்டு வண்டியில் தாம்பூள, சீருடன் வீடு, வீடாக சென்று அழைப்பிதழை வழங்கியுள்ளார் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம்.
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடியாரை வரவேற்க ஏறு பூட்டிய மாட்டு வண்டியில் தாம்பூள, சீருடன் வீடு, வீடாக சென்று அழைப்பிதழை வழங்கி இருக்கிறார் அம்மாபேரவை இணை செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ஜெயராம். மேலும், அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' லோகோ பொரித்த சட்டை, வேட்டி, மற்றும் மகளிர்களுக்கு பட்டு சேலைகளுடன் அழைப்பிதழையும் வழங்கினார்.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணியின் வழிகாட்டுதலின் பேரில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டமும், செப்டம்பர் 13 ஆம் தேதி கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மசக்காளிபாளையம் சாலையில், பாலன் நகர் வளைவு அருகில், முன்னாள் முதல்வரும் கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பாக சிங்காநல்லூர் பகுதிகழக செயலாளர் சிவக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை: இ.பி.எஸ்.ஸை வரவேற்க ஏறு பூட்டிய மாட்டு வண்டியில் சென்று தாம்பூள, சீருடன் வீடு வீடாக அழைப்பு!#Coimbatore | @EPSTamilNadu | @AIADMKOfficialpic.twitter.com/BRmgYXgESW
— Indian Express Tamil (@IeTamil) September 3, 2025
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கோவை மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன், கழக அம்மாபேரவை இணை செயலாளரும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ஜெயராம், ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு வேட்டி, சட்டை, மற்றும் சேலைகளுடன் அழைப்பிதழ்களை வழங்கினார். மேலும் ஏறு பூட்டிய மாட்டு வண்டியில் வீடு,வீடாக சென்று தாம்பூழத்துடன் பொதுமக்களுக்கு அழைப்பிதழை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், கோவை மாநகர மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் சிவபிரசாந்த். கழக சிறுபானமை பிரிவு இணை செயலாளர் சி.டி.சி.ஜப்பார். மகளிரணி மாவட்ட செயலாளர் லீலாவதி உண்ணி. மாணரணி மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், பீளமேடு துரைசாமி உட்பட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.