கோவை தொண்டாமுத்தூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த ஆறு வயது சிறுவன், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் குகன்ராஜ் (6). வேடப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
மதிய உணவு சாப்பிட்டு விளையாட சென்ற சிறுவன், அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை, சிறுவனின் சித்தி நாகராணி பல இடங்களில் தேடியும் அவனை காணவில்லை.
அப்பொழுது நாகராஜபுரத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச் சுவர் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணி நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/2MyzzaxXJnV3tO7zfGFv.jpeg)
/indian-express-tamil/media/media_files/eLDuvHJLgTEuuUfnd19M.jpeg)
இதற்காக 6 அடி ஆழம் 3 அடி அகலத்தில் தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் தண்ணீர் எடுப்பதற்காக கட்டிட பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் சென்றனர்.
அப்பொழுது தண்ணீர் தொட்டியில் சிறுவன் விழுந்து கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குகன்ராஜை மீட்க அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு அமைச்சர் முத்துசாமி ரூ.50,000 நிதி உதவி வழங்கினார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“