scorecardresearch

சூலூரில் பெய்த மழையில் குழிக்குள் ஒதுங்கிய கண்ணாடி விரியன் பாம்பு

சஜித் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குழிக்குள் இருந்த விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தார்.

snake
Snake rescue Video

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பாலு கார்டன் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவர் வீட்டிற்கு அருகில் விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சென்றுள்ளது, மாலை நேரத்தில் கோடை மழை பெய்ததன் காரணமாக கண்ணாடி விரியன் பாம்பு அவர் வீட்டு அருகே இருந்த குழிக்குள் விழுந்து, வெளியே வர முடியாமல் பாம்பு தத்தளித்து கொண்டு இருந்துள்ளது, இதுகுறித்து கோவிந்தராஜ் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் பாம்பு பிடிப்பாளரான சஜித் என்பவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குழிக்குள் இருந்த நான்கரை அடி நீளம் கொண்ட விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தார்.

பிறகு பாம்பை மதுக்கரை வன சரகத்தில் உள்ள வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றார். இதையடுத்து பாம்பு அங்குள்ள வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore snake rescue video kannadi viriyan