Advertisment

கோவையை சூழ்ந்த பனி மூட்டம்: ஸ்பெஷல் படங்கள்

கோவை - சிறுவாணி சாலை, நீலாம்பூர் சாலை ஆகிய பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore Snow Covers; Special Pictures Tamil News

coimbatore latest news today in tamil

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

Coimbatore News in Tamil: கோவையில் தொடர் மழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; மாண்டஸ் புயல் முடிந்த நிலையிலும் கோவையில் காலை முதல் பரவலாக இன்று மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கோவை மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாண்டஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையை கரையை கடந்தது.

publive-image

இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவையிலும் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இடைவிடாமல் பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

publive-image

தொடா் மழையால் கோவையில் குளிரின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை பெய்த மழையால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லுவோர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோவையில் காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்து வரும் நிலையில் கோவையில் அதிகாலையில் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த பணி காலை 9 மணி வரை பனிமூட்டம் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றதை காணமுடிகிறது. குறிப்பாக கோவை - சிறுவாணி சாலை, நீலாம்பூர் சாலை ஆகிய பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image
publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Coimbatore Tamilnadu News Update Tamilnadu News Latest Tamilnadu Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment