Advertisment

சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் விநோத திருவிழா: ரத்தம் சொட்டச் சொட்ட அம்மன் அழைப்பு

கோவை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழாவில் பக்கதர்கள் தங்கள் கை, உடலில் கீறி அம்மன் அழைப்பு வழிபாடு செய்தனர்.

author-image
WebDesk
Oct 24, 2023 12:52 IST
New Update
Temple fest.jpg

கோவை டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு விழா நடைபெறும். அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் மக்கள் கத்தி போடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். 

Advertisment

கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்த கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கி டவுன்ஹால் பகுதியில் உள்ள சவுடேஸ்வரி கோவில் வந்து அடைந்தது. 

Temple fest1.jpg

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கை, உடல்களில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். 

இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பின்னர் அம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 

Temple fest2.jpg

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
#Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment