Coimbatore SP Pandiarajan : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை விசாரித்து வந்த காவல்த்துறை அதிகாரிகள் மொத்தமாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில், பெண்களை ஏமாற்றி, பாலியல் தொல்லை கொடுத்து வந்த நால்வர் குறித்த வீடியோக்கள் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள் உள்ளாக்கியது.
திருநாவுக்கரசு, வசந்த குமார், ரிஷ்வந்த் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேரின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வழக்கை சி.பி.சி.ஐ.டியில் இருந்து சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. மேலும் இந்த சம்பத்தின் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் வலை உள்ளது என்றும் கூறி வந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி மற்றும் அவருடைய அண்ணன் பெயர் என அனைத்தையும் வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கினார் கோவை எஸ்.பி. பாண்டியராஜன்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி. பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்.பியாக சுஜித் குமார் பணி நியமனம்.
பொள்ளாச்சி கிழக்கு ஆய்வாளராக செயல்பட்டு வந்த நடேசன் மாற்றப்பட்டு வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார். பொள்ளாச்சி டி.எஸ்.பி.யாக பணியாற்றிய ஜெயராமன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு கே.ஜி.சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Coimbatore sp pandiarajan transferred new sp sujith kumar taking charges