இ.பி.எஸ்-க்கு ஆதரவாக ஐகோர்ட் தீர்ப்பு: தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய எஸ்.பி.வேலுமணி

ஓ.பி.எஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடைபெற்றது.

ஓ.பி.எஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: SP Velumani sweet to cadres, EPS AIADMK on Madras HC verdict Tamil News

ஓ.பி.எஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானங்களுக்கும் தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், ஓ.பி.எஸ் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

publive-image

இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Ops Eps Aiadmk O Panneerselvam Sp Velumani Edappadi K Palaniswami Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: