கோவை மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டு வருகிறது. சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இந்த தெரு நாய்களால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனிடைய கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுமியை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் துரத்தி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி வேகமாக அலறிக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்து தெரு நாயிடமிருந்து தப்பித்துள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கோவை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை மாநகராட்சியினர் விரைந்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“