Advertisment

ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 தேர்வு; கோவை மாணவர் சாதனை

உலக அளவில் கடினமான தேர்வாக கருதப்பட்டு வருகின்ற ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 தேர்வில் - இந்திய அளவில் 390-வது இடத்தை பிடித்து சாதனை படைத்த மாணவன்.

author-image
WebDesk
New Update
Coimbatore Student Performance in JEE Exam

ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 தேர்வில் கோவை மாணவர் சாதனை படைத்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை ஐஐடி - என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 எனும் நுழைவு தேர்வை சென்னை ஐ.ஐ.டி பல்கலைக்கழகம் கடந்த மே மாதம் 26"ம் தேதி நடத்தியது. 

உலக அளவில் கடினமான தேர்வாக கருதப்பட்டு வருகின்ற இந்த தேர்வை  எழுத இந்தியா முழுவதிலும் இருந்து 1,80,200 பேர் விண்ணப்பித்து தேர்வை எதிர் கொண்டனர். 

Advertisment

இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இத்தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 48,248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் மையத்தில் பயிற்சி மேற்கொண்ட நான்கு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். 

மேலும் இம்மையத்தில் பயிற்சி பெற்ற ஸ்ரீ ராம் என்ற மாணவர் இந்திய அளவில் 390"வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாணவன் ஸ்ரீ ராம் கூறுகையில், “நாடு முழுவதும் இந்த தேர்வு மிகவும் கடினம் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. 

மேலும் தேர்வு களை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி தேர்வுகளையும் வைத்து கூடுதல் கவனம் செலுத்தினர். மேலும் பயிற்சி ஆசிரியர்கள் எந்த சந்தேகங்களையும் எளிதில் புரியும் வகையில் எங்களுக்கு கற்று தந்தனர். ஆகாஷ் பயிற்சி மைய ஆசிரியர்களின் அதீத கற்பித்தல் திறன் காரணமாகவே இந்த தேர்வை எளிதில் எதிர்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளதாக கூறினார். 

சாதனை படைத்த 4"மாணவர்களையும் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் மையத்தில் பயிற்சி ஆசிரியர்கள் பாராட்டு விழாவை முன்னெடுத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரபட்ட  மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும்  கேக் வெட்டியும்  இந்த வெற்றியை  கொண்டாடினர்.

செய்திகள் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment