/indian-express-tamil/media/media_files/2025/07/15/coimbatore-sulur-mla-vp-kandasamy-complaint-collector-to-remove-tasmac-shops-at-somanur-tamil-news-2025-07-15-20-36-20.jpg)
சோமனூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபான கடைகளை அகற்றக் கோரி சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, கடைகள் அகற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது கருமத்தம்பட்டி நகராட்சி. இந்நிலையில், கருமத்தம்பட்டியில் சோமனூர் வாரச்சந்தைக்கு தெற்கு பகுதியில் மில் ரோட்டில், மீனாம்பிகா தியேட்டர் அருகில் தற்போது புதிய மதுபான கடை திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எற்கனவே கருமத்தம்பட்டி சோமனூர் 27-வது வார்டு பகுதியில் இரண்டு மதுபான கடைகள் செயல்படுகிறது என்றும், தற்போது புதியதாக மற்றொரு மதுக்கடை திறக்கப்பட இருப்பதாகவும், அதனை கைவிடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும், சோமனூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபான கடை எண் 1689-க்கு அருகில் வாரம் இரண்டு முறை இயங்கும் வாரச் சந்தை, ஆரம்ப சுகாதார நிலையம், கிறிஸ்துவ தேவாலயம் இருக்கிறது. சோமனூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வந்து செல்கின்ற பகுதியில் மதுபான திறக்கப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் மிகவும் பாதிக்கக்கூடிய சூழ்நிலையில் உருவாகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக டாஸ்மார்க் கடையில் அகற்ற வேண்டும் என்றும், அதேபோல சூலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகளை சீரமைத்து தர வேண்டும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் இல்லாவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவிக்கப்பட்டுளள்து. இது தொடர்பான மனுவை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.