Advertisment

சாதி வாரி கணக்கெடுப்பு: ஸ்டாலினுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அந்தந்த சாதிகளுக்கு ஏற்றவாறு சமூக நீதி கிடைக்க பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore T Velmurugan Tamizhaga Vazhvurimai Katchi urges CM MK Stalin to conduct caste based survey in TN Tamil News

கோவை கொடிசியாவில் நடைபெறும் தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமானம் மூலம் கோவை வந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கோவை கொடிசியாவில் நடைபெறும் தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:- 

சமூக நீதி கோட்பாடு அடிப்படையில் துவங்கப்பட்ட இயக்கமான பா.ம.க தொடர்ந்து தோல்விகளை தழுவுவது எதிர்காலத்தில் சமூக நீதி குறித்த ஒரு கேள்வி உருவாகும் என்பதாக நான்  கருதுகிறேன். அரசியலில் ஆயிரம் மாட்சியங்கள்  இருந்தாலும் சமூகநீதி தளத்தில் பணியாற்றுகின்ற எங்களைப் போன்றவர்களுக்கு அந்த உண்மையான சமூக நீதியை எடுத்து மக்களிடத்தில் சொல்லி அனைத்து சமூக மக்களின் வாக்குகளை பெற்று சமூக நீதி கோட்பாடு தத்துவத்தின் அடிப்படையில் எப்போதும் அரசியலில் நீடிக்க வேண்டும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என்றாலே ஆளுகின்ற அரசியல் கட்சி வெற்றி பெறுவது தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலம் இருந்து வருகின்ற உண்மை என்றாலும், இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ச்சியாக மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியும், மக்களின் அன்பையும் பெற்றிருக்கிற காரணத்தினாலும் வலுவான ஒரு கூட்டணியை தொடர்ச்சியாக மூன்று பொது தேர்தலில் மகத்தான வெற்றியை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொண்டிருப்பதாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான  மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். 

நடந்து முடிந்த தேர்தலில் பண பலம் அதிகார பலம் வெற்றி பெற்றிருப்பதாக கூறும் எதிர்கட்சிகள் கூறுவதைப் பொறுத்தவரை, எப்போதுமே தோல்வியை தழுவுகின்றவர்கள் பணபலம் ஆட்பலம் என்று சொல்வார்கள். ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்கள் வாக்களிக்காமல் வெற்றி பெற முடியாது மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் வெற்றி கிடைத்திருக்கிறது. தமிழக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில் மக்களுக்கான சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, பல்வேறு அறிவு சார்ந்த தளத்தில் இந்த அரசு மிகச் சிறப்பாக பணியாற்றி இருப்பதற்காக கிடைத்த அங்கீகாரம் மற்றும் கூட்டணி கட்சியினுடைய தொண்டர்களின் கடினமான உழைப்பும் சேர்ந்து கிடைத்த வெற்றி தான் இந்த மகத்தான வெற்றி. 

தி.மு.க-வுடன் இணைந்து மூன்று தேர்தலை சந்திக்கிறோம். இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்களுக்கான பங்கினை கொடுத்து முதலமைச்சர் அழைத்துச் சென்றிருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று நம்புகிறேன். 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாடு முழுவதும் அந்தந்த சமூகங்களுக்கான உண்மையான எண்ணிக்கை அடிப்படையில் சமூக நீதி வழங்கப்பட வேண்டும், கல்வி வேலைவாய்ப்பு உரிமை வழங்கப்பட வேண்டும்.  குறிப்பாக தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுகிறது. தொழில் வணிக வளம் தமிழர்களிடமிருந்து தட்டிப் பறிக்கப்படுகிறது. 

இதில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளுக்கு ஏற்றவாறு சமூகநீதி கிடைக்க சமூக நீதி கோட்பாட்டின் வழியில் வந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சமூக நீதி அரசராக நடத்துகின்ற இந்த அரசு உடனடியாக சமூகநீதி காக்கின்ற வகையில் சாதிவாரி கணக்கெடுப்பை அவசியம் நடத்த வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் கண்டிப்பாக முதலமைச்சர் இதனை செய்வார். 

இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

 

T Velmurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment