'2 ஆண்டுக்கு முன் எடுத்த வீடியோ, கணவருடன் திருந்தி வாழ்கிறேன்': போலீஸ் தேடும் கோவை தமன்னா - வீடியோ
கோவை போலீசாரால் தேடப்பட்டு வரும் 'தமன்னா' என்கிற 'வினோதினி' பட்டா கத்திகளுடன் இருந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ எனவும், தற்போது தான் திருந்தி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கோவை போலீசாரால் தேடப்பட்டு வரும் 'தமன்னா' என்கிற 'வினோதினி' பட்டா கத்திகளுடன் இருந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ எனவும், தற்போது தான் திருந்தி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
Coimbatore Tamanna video Tamil News: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அன்மையில் சத்திய பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மறுநாளே நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார். முன்பகை காரணமாக கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மாநகர போலீசார் ரவுடிகளை கண்காணித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் போலீசார் உண்ணிப்பாக கவனித்து வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில், இளம் பெண் ஒருவர் “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அதில் புகைப்பிடித்தவாறு பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருக்கும் வீடியோ பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். குறிப்பாக, “எதிரி போட நினைத்தால், அவனை போடுவோம், ஓடுனா கால வெட்டுவோம்” என்ற வன்முறையை தூண்டும் வகையிலான பாடலுடன் ரீல்ஸ் செய்திருந்தார் .
மேலும் இந்த பெண் அண்மையில் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்ய நபர்களுடன் இன்ஸ்டாவில் நண்பராக உள்ளவர. விசாரணையில் இந்தப் பெண் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வினோதினி ( 25 வயது) என்பது தெரியவந்துள்ளது.
Advertisment
Advertisements
இந்நிலையில், மாநகர போலீசார் வினோதினி மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் காவல் துறையினர் தேடிக் கொண்டிருந்தாலும் கணவருடன் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகளை அவர் பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று அவர் வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில், ஆயுதங்களுடன் தான் ரீல்ஸ் செய்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது எனவும், ட்ரண்டிக்கிற்காக செய்த வீடியோக்கள் எனவும், தற்போது தான் தனது கனவுகளுடன் ஆறு மாதம் கர்ப்பிணியாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் வந்தால் மட்டுமே தனது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த சிலரை விடுவிப்பேன் என காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.