கோவை மாநகராட்சி 86"வது வார்டு குப்பை வண்டி ஓட்டும் ஓட்டுநர் சபரிமலை யாத்திரை சென்ற காரணத்தினால் தொடர்ந்து பல நாட்களாக வீடு வீடாக சென்று குப்பைகள் எடுக்கும் பணி நடைபெறாமல் இருந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/ugoWaTVuVhjltQ6iqgrH.jpg)
இதனை அறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர் அன்பு நகர் பகுதியில் உள்ள வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகளை பெறுவதற்கு குப்பைகள் பெறும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை பெறும் பணியில் ஈடுபட்டார். வாகன ஓட்டுநர் விடுமுறையில் சென்றதால் தானாக முன்வந்து வாகனத்தை இயக்கிய மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர் MC அவர்களை வார்டு பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“