கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகமெங்கும் திரையிட கோரி இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழங்கால் போட்டு வலியுத்தினர்.
Advertisment
இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கேரளா ஸ்டோரி படத்தை தமிழகமெங்கும் திரையிட வேண்டும் என வலியுத்தி மனு அளிக்கப்பட்டது.
கேரளா ஸ்டோரி திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலிஸ் பாதுகாப்புடன் தமிழகத்தில் வெளியாகியது. ஆனால் பல திரையரங்குகளில் கேரளா ஸ்டோரி திட்டமிடப்படி திரைப்படம் திரையிடப்படவில்லை. பெரிய மால்களில் மட்டும் வெளியாகியது.
Advertisment
Advertisements
ஆனால் மொத்தமாக கேரளா ஸ்டோரி திரைப்படம் இரண்டு நாள் வசூல் 19 கோடி எனவும் இந்த திரைப்படத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்து இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனு அளிப்பதற்கு முன்னர் அவ்வமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் அருகே முழங்கால் போட்டு படத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த படத்தை தடையின்றி தமிழகம் முழுவதும் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “