New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/17/QK8uCz4gFam4qqZ4qwPX.jpg)
கோவை மாவட்டத்தில், செல்போன் கடைக்குள் புகுந்த திருடன், புளூட்டூத் ஹெட் செட்டை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, சாய்பாபா காலனி பகுதியில் ரகுமான் என்பவர் டாக் அண்ட் வாக் என்ற செல்போன் கடை நடத்தி வருகிறார். இக்கடையில், 5-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், உணவு இடைவேளியின் போது கவிதா என்ற பெண் மட்டும் தனியாக கடையில் பணியில் இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், விலை உயர்ந்த புளூட்டூத் ஹெட்செட் ஒன்றின் விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த இளைஞர் ஹெட்செட்டை எடுத்து திடீரென ஓட்டம் பிடித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த கவிதா, அந்நபரை விரட்டிச் சென்றார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞர் தப்பிச் சென்றார்.
தப்பிச் சென்ற அந்த இளைஞர், வேறு இரண்டு நபர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதாக கடையின் ஊழியர் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் அனைத்தும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. காலை நேரத்தில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் திருட்டு சம்பவம் நடந்ததால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கோவையில், செல்போன் கடைக்கு வந்த நபர் புளூடூத் ஹெட்செட்டை திருடிச் சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#Coimbatore #CCTV pic.twitter.com/lQIVmPv2rN
— Indian Express Tamil (@IeTamil) December 17, 2024
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.