'அதுக்கு வாய்ப்பே இல்ல; உட்கட்சி பூசலை சரி பண்ணுங்க': அ.தி.மு.க பற்றிய கேள்விக்கு அண்ணாமலை பதில்

அ.தி.மு.க உட்கட்சி பூசலை அவர்கள் முதலில் சரி செய்யட்டும் என்றும் வருங்காலத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பது கிடையாது என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அ.தி.மு.க உட்கட்சி பூசலை அவர்கள் முதலில் சரி செய்யட்டும் என்றும் வருங்காலத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பது கிடையாது என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Coimbatore TN BJP Chief Annamalai speak about AIADMK and leaders EPS SP Velumani Tamil News

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக உட்கட்சி பூசலை அவர்கள் முதலில் சரி செய்யட்டும் என்றும் வருங்காலத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பது கிடையாது என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

Advertisment

அண்ணாமலையும் ஆட்டுக்குட்டியும் என ஊடகங்களில் வெளியாவது குறித்து கேட்டதற்கு, "அண்ணாமலை மீது கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள், ஆட்டை அடிக்க வேண்டாம்" என்று கூறினார். 

அ.தி.மு.க, பா.ஜ.க இணைந்து போட்டியிட்டால் 30 முதல் 35 இடங்களை தமிழகத்தில் வென்றிருக்க முடியும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியது குறித்து அவரிடம் கேட்டபோது, "அ.தி.மு.க-வுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை" என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், "நடந்து முடிந்த மக்களவை தேர்தல் குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, தவறான புள்ளி விவரங்களை கொடுத்துள்ளார். கோவை மக்கள் அதிமுகவை புறக்கணித்து விட்டார்கள். தற்போது நடந்து முடிந்த தேர்தலில், பாஜக அதிக எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றுள்ளது. படிப்படியாகத்தான் வெற்றியை எட்ட முடியும். 

Advertisment
Advertisements

பா.ஜ.க கோவையில் அதிகமாக வாக்குகள்  பெற்று, இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அதை அவர்கள் முதலில் சரி செய்து கொள்ளட்டும்" என்றும் அண்ணாமலை கூறினார். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Aiadmk Sp Velumani Edappadi K Palaniswami Coimbatore Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: