/indian-express-tamil/media/media_files/2024/10/24/nquoVaidEv7KAKQaa6Kh.jpg)
கோவை - பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த நிலையில், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் பயணம் செய்தனர்.
இந்த நிலையில், இந்தப் பேருந்து மயிலேறிபாளையம் பிரிவை கடந்து வந்தபோது, என்ஜினில் இருந்து புகை வருவதை கண்ட நடத்துனர் கதிரேஷ், உடனடியாக ஓட்டுனரிடம் கூறியுள்ளார். இதை அடுத்து ஒத்தக்கால் மண்டபம் அடுத்த பிரீமியர் நகர் பகுதியில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டார்.
அப்போது மள மளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பேருந்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
அதிர்ஷ்டவசமாக பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அரசுப் பேருந்து தீப்பிடித்தது எப்படி? - விளக்கும் ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு!https://t.co/gkgoZMIuaK | #TNGovt | #ArasuBus | #FireAccident | #Coimbatore |@arasubuspic.twitter.com/EUz0hknCwO
— Indian Express Tamil (@IeTamil) October 24, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.