அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட இலவச உடற்பயிற்சி கூடங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் தி.மு.க- கோவையில் கண்டனம்

தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கின்ற அந்த இலவச உடற்பயிற்சி கூடங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கின்ற அந்த இலவச உடற்பயிற்சி கூடங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore ADMK Councillors

கோவை மாநகராட்சி அலுவலகம் விக்டோரியா ஹாலில், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

முன்னதாக இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி பகுதிகளில் துவக்கப்பட்ட இலவச மாநகராட்சி உடற்பயிற்சி கூடங்களுக்கு தற்பொழுது உள்ள திமுக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

Coimbatore tn govt Free Gyms

இது குறித்து பேசிய அவர்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி பகுதிகளில் இலவச உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டது.

Advertisment
Advertisements

தற்பொழுது தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கின்ற அந்த இலவச உடற்பயிற்சி கூடங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

ஏற்கனவே பல்வேறு விஷயங்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இதற்கும் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இளைஞர்களை ஊக்குவிக்கும் அரசு என்று கூறிக்கொள்ளும் திமுகவினர் இவ்வாறு செய்யலாமா என கேள்வி எழுப்பினர். 

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: