Advertisment

கோவை: அமைச்சர் டி.ஆர்.பி ராஜா காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் சாலையில் நின்று கொண்டிருந்த நிலையில், அதில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore TN Minister TRP Raja car searched by election flying squad Tamil News

கார் சோதனையின் போது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அங்கு இல்லை.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Coimbatore | TRP Raja: கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார் 

Advertisment

இந்த நிலையில், இன்று கோவை கவுண்டம்பாளையத்தில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அங்கிருந்த கட்சி நிர்வாகி சரத் விக்னேஷ் என்பவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அவருக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்திருந்தனர் 

இதற்கிடையில், சாலையில் நின்று கொண்டிருந்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா காரில் அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் காரின் பின்புற கதவை திறந்து சோதனை மேற்கொண்ட நிலையில், சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனையின் போது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment