Advertisment

கோவை செல்லும் ரயில் சேவையில் மாற்றம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் கோவை செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

author-image
WebDesk
New Update
railway Train

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மதுரை, கண்ணூா், ஷோரனூரில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில்கள் ஏப்.13-ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு:

சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் கோவை செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அதன்படி, கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13-ஆம் தேதியும், காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14-ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்.

மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து பகல் 12.55 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13-ஆம் தேதியும், காலை 10.55 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14-ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்.

கேரள மாநிலம் ஆலப்புழை- தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம்- பெங்களூா் இன்டா்சிட்டி அதிவிரைவு ரயில், பாலக்காடு- ஈரோடு விரைவு ரயில் ஏப்.13-ஆம் தேதி கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

கோவை- மதுரை, கோவை- கண்ணூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் ஏப்.13-ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில்கள் போத்தனூரில் இருந்து புறப்பட்டு மதுரை, கண்ணூா் சென்றடையும்.

இதுபோல், ஷோரனூா்- கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஏப்.13,14 ஆகிய தேதிகளில் கோவை செல்வதற்கு பதிலாக போத்தனூருடன் நிறுத்தப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment