Advertisment

Coimbatore, Madurai, Trichy News Highlights: சரக்கு ஏற்றுமதியில் ரூ.544.85 கோடி வருவாய் - திருச்சி ரயில்வே கோட்டம் சாதனை

கோவை, மதுரை, திருச்சி போன்ற அனைத்து மாவட்ட செய்திகளையுன் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trichy

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
  • Dec 18, 2024 18:35 IST
    சரக்கு ஏற்றுமதியில் ரூ.544.85 கோடி வருவாய் - திருச்சி ரயில்வே கோட்டம் சாதனை 

    திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் சரக்கு ஏற்றுமதியில் ரூ.544.85 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. சரக்குப் போக்குவரத்துச் சேவையில் திருச்சி ரயில்வே கோட்டம் முதல் முறையாக 10 மில்லியன் டன் சரக்கு ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது.



  • Dec 18, 2024 18:26 IST
    கல்குவாரி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

    நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே இருக்கன்துறை பகுதியில் உள்ள கல் குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில் மூன்று பேர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர், வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் விரைந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர்.

    மொத்தமாக மூன்று பேர் உள்ளே சிக்கியிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சிக்கியிருந்த மூவரில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் அருள்குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த ஜேசிபி ஓட்டுநர் ராஜேஷ் மீட்கப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு தொழிலாளி ஒருவர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் கனிமவளத்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



  • Advertisment
    Advertisement
  • Dec 18, 2024 17:30 IST
    நெல்லையில் வீடு வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளைத் திருடியவர் கைது

    நெல்லையில் வீடு வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளைத் திருடிய தாணப்பன் (52) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு வெளியில் காயப்போடும் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து காணாமல் போனதால், அதிர்ச்சியடைந்த நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்த பெண்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.



  • Dec 18, 2024 17:23 IST
    கோவை வால்பாறை கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

    கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள 5 நாட்களுக்குப் பிறகு கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் பெய்த கனமழையால் அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.



  • Dec 18, 2024 16:56 IST
    லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை ஜி.எஸ்.டி துணை ஆணையர் உள்பட 3 பேர் கைது

    துரையில் கார்த்திக் என்பவரிடம் ஜி.எஸ்.டி வரி பாக்கியை குறைப்பதற்காக ரூ.3.5 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஜி.எஸ்.டி துணை ஆணையர் சரவணகுமார் உள்பட 3 அதிகாரிகளை சி.பி.ஐ கைது செய்துள்ளனர். லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டபின், ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவல்காகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பின்  3 பேரும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.



  • Dec 18, 2024 15:19 IST
    பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படித்தால் வீட்டு வரி, தண்ணீர் வரி இல்லை - கிராம ஊராட்சி மன்றத் தலைவர்

    திருவாரூர் மாவட்டம், பதினெட்டு புதுக்குடி கிராம மக்களுக்கு தண்ணீர் வரியும், வீட்டு வரியும் கிடையாது. ஆனால் எல்லாருக்கும் இந்த வரி விலக்கு பொருந்தாது. வரி விலக்கை பெற விரும்பினால் ஒரு நிபந்தனை இருக்கிறது. அது என்ன தெரியுமா, எங்க ஊர்ல இருக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் அவர்களுடைய பிள்ளைகள் படிச்சா போதும் வீட்டு வரி கட்ட வேண்டாம்' என்று ஊரட்சி மன்ற தலைவர் திவ்யா தெரிவித்துள்ளார்.



  • Dec 18, 2024 15:05 IST
    திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆஜரானார்.

    தேர்தல் விதிமுறை தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 1 நீதிபதி பாலாஜி முன்பு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜனவரி 8ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.



  • Dec 18, 2024 15:03 IST
    மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

    திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மற்றொரு நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து மணிகண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Dec 18, 2024 14:53 IST
    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகை

    கோயம்புத்தூர் அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையம் தொடங்கி வைக்கவுள்ளார். அதன் பிறகு மாலை 4 மணிக்கு சக்தி சாலை, பெத்தேல் மாநகர பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ளுவார். மாலை 5 மணியளவில் வ.உ.சி மைதானத்தில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் அலுவலகம் திறப்பு விழா நடைபெறும். அதையடுத்து 5.30 மணிக்கு கோவை மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்வு நடைபெறும். 



  • Dec 18, 2024 14:48 IST
    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை செல்கிறார்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மதியம் 3.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அதனைத் தொடர்ந்து மாலை தனியார் பத்திரிகை நிகழ்வில் கலந்து கொள்கிறார்



  • Dec 18, 2024 14:47 IST
    கோவையில் இருந்து திருப்பூர் செல்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

    கோவை: மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று மதியம் 3.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவையில் இருந்து திருப்பூர் செல்கிறார்.



  • Dec 18, 2024 13:38 IST
    தனியார் நிதி நிறுவனர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சாத்திரப்பட்டியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை. ஒரு மணி நேரத்திற்கு மேலாக 2 வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 



  • Dec 18, 2024 13:13 IST
    சுடுமண் புகைபிடிப்பான், அகல் விளக்கு கண்டெடுப்பு

    பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் புகைபிடிப்பான், அகல் விளக்கு கண்டெடுப்பு



  • Dec 18, 2024 12:21 IST
    மது விலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    "பல ஆண்டுகளாக கள்ளச்சாரய விற்பனையை தடுக்காமல், மது விலக்கு  பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது?" என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் கைதானவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கு. அணைத்து மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 



  • Dec 18, 2024 12:03 IST
    நடுக்கல்லூர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் விவகாரம்

    நடுக்கல்லூர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம். ப்ளீச்சிங் பவுடர் தூவும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள். மருத்துவ கழிவுகள் மற்றும் சாதாரண கழிவுகளை பிரித்து அகற்ற கோரிக்கை. 



  • Dec 18, 2024 12:00 IST
    ஜி.எஸ்.டி துணை ஆணையர் கைது

    தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில், லஞ்ச புகாரில் ஜிஎஸ்டி துணை ஆணையர் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.



  • Dec 18, 2024 10:54 IST
    கொலை வழக்கில் 3 பேர் கைது

    நாமக்கல்லில் 2 வடமாநில தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுபோதையில் ஏற்பட்ட தகாராறில் கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான ராஜன் லகுரி, மான்சிங் காக்ராய் மற்றும் தஸ்ரத் பேடிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



  • Dec 18, 2024 09:56 IST
    கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

    சிவகங்கை மாவட்டம், முதுவன்திடல் கிராமத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை மூன்று மாதங்களில் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கண்மாய்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Dec 18, 2024 09:36 IST
    ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில்வேயின் உயரிய விருது

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில்வேயின் 'அதி விஷித் ரயில் சேவா புரஸ்கார்' என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தின் போது செந்தூர் விரைவு ரயிலை உரிய நேரத்தில் நிறுத்தி பெரும் விபத்தை தடுத்ததால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 18, 2024 09:25 IST
    திருப்பூரில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

    திருப்பூரில் மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்ய கோரியும், கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு அனைத்து வணிகர் சங்கத்தினரும், எதிர்க்கட்சியினரும் ஆதரவு அளித்தனர்.



Tamilnadu Live News Udpate Live News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment