Coimbatore, Madurai, Trichy News Updates: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN CM MK Stalin letter to union minister to release social-welfare schemes fund Tamil News

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நடப்பு ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இதன் காரணமாக அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்குச் செல்ல மார்ச் 2-ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  • Feb 24, 2025 20:13 IST

    சிலம்பம் ஆசிரியர் மரணம்: அழுதுகொண்டே சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்திய மாணவர்கள்

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு மாணவர்கள் அழுதபடியே சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்தினர்.  கபடி வீரரான இவர், நேற்று கபடி விளையாடும்போது கையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்த உடனே மீண்டும் விளையாடச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சிலம்ப ஆசிரியருக்கு மாணவ, மாணவியர்கள் சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்தியது அங்கிருந்த பொதுமக்கள் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.



  • Feb 24, 2025 19:31 IST

    பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

    தருமபுரி : பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • Advertisment
  • Feb 24, 2025 18:49 IST

    வனப்பகுதியில் நிலவும் வறட்சி

    நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் முன்கூட்டியே ஆரம்பித்த வறட்சியால், வனவிலங்குகளுக்கு தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனையடுத்து வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்



  • Feb 24, 2025 17:45 IST

    பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் - ஸ்டாலின் உத்தரவு

    தருமபுரி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்



  • Advertisment
    Advertisements
  • Feb 24, 2025 17:34 IST

    கோயில் நகரமான மதுரை, குப்பை நகரமாக மாறி வருகிறது - நீதிபதி வேதனை

    கோயில் நகரமான மதுரை, குப்பை நகரமாக மாறி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. நெடுஞ்சாலையின் இருபுறமும் குப்பைகள் குவியல், குவியலாக தீ வைத்து எரிக்கப்படுகிறது என வழக்கு ஒன்றின்போது ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி வேதனை தெரிவித்தார்.



  • Feb 24, 2025 17:07 IST

    மலைக் கிராம மக்களின் சிரமங்கள் குறித்து தமிழக அரசுக்கு கவலை இல்லை - எல்.முருகன்

    கோவையில் இறந்தவரின் உடலை 5 கி.மீ தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. அடிப்படை சாலை வசதி இன்றி தவித்து வரும் மலைக் கிராம மக்களின் சிரமங்கள் குறித்து தமிழக அரசுக்கு கவலை இல்லை. கோவை - கடமான்கோம்பை பகுதிவாழ் மக்களுக்கு உடனடியாக சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்



  • Feb 24, 2025 16:03 IST

    தருமபுரியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பெண்கள் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Feb 24, 2025 15:59 IST

    ஜாக்டோ ஜியோ எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது - ஐகோர்ட் உத்தரவு

    “அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது” என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



  • Feb 24, 2025 15:31 IST

    அய்யா வைகுண்டர் அவதார திருவிழா: தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

    அய்யா வைகுண்டசாமியி 193வது அவதார திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.



  • Feb 24, 2025 14:48 IST

    சுற்றுலா பயணி 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

    கன்னியாகுமரி மாவட்டம் காந்தி மண்டபம் அருகே பாறையில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றபோது அலையில் சிக்கிய பயணி சடலமாக மீட்கப்பட்டார். 2 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பணிக்குப் பின் சுற்றுலா பயணியின் உடலை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் மீட்டது.



  • Feb 24, 2025 14:26 IST

    இந்தி எழுத்துகளை அழித்து எதிர்ப்பு

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துகளை அழித்து தி.மு.க-வினர் எதிர்ப்பு வருகின்றனர். மத்திய  அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். சென்னை ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தபால் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். 

     



  • Feb 24, 2025 13:56 IST

    பட்டியலின சமூகத்தினர் வழிபட தடை: அதிரடி உத்தர போட்ட மதுரை ஐகோர்ட்

    மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பகுதியில் உள்ள கடவு காத்த அய்யனார் கோயிலில், பட்டியலின சமூகத்தினர் வழிபாடு செய்வதை தடுப்போர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 24, 2025 13:37 IST

    திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் 

    திருத்துறைப்பூண்டியில் 100க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் வேகன்களுக்காக கடந்த பிப்ரவரி.22ம் தேதி முதல் சுமார் 140 லாரிகளில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதிக ரயில் வேகன்களை வரவழைத்து நெல் மூட்டைகளை ஏற்ற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர் .



  • Feb 24, 2025 12:25 IST

    நாமக்கல்லில் முதல்வர் மருந்தகம்

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இரு இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாதேஸ்வரன் எம்.பி. திறந்து வைத்தார்.



  • Feb 24, 2025 11:45 IST

    போராட்டம் குறித்து நீதிபதிகள் கேள்வி

    ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணையின் போது, "பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்ன?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் போராட்டம் நடத்துவது சட்ட விரோதம்" என்று மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. "ஒருநாள் அடையாள போராட்டம் தானே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் என்ன?" என்று நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பினர். மேலும், அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Feb 24, 2025 10:45 IST

    திருவாரூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

    திருவாரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயில் தடம் புரண்டது. திருவாரூரில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சரக்கு ரயில். சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல் துறையினர் ஆய்வு.



  • Feb 24, 2025 10:43 IST

    சேலத்தில் ஆன்லைன் மோசடி

    சேலத்தில் ஆன்லைனில் வேலை வழங்கி தருவதாக ஆசை காட்டி ரூ. 5 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Feb 24, 2025 10:42 IST

    பாவூர்சத்திரத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த இண்டி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது. பொள்ளாச்சி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவிலை தொடர்ந்து பூவூர்சத்திரத்திலும் திமுகவினர் போராட்டம்.



  • Feb 24, 2025 09:42 IST

    கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் கைது

    கோவை மாவட்டத்தில் தங்கும் அறையில் கஞ்சா செடி வளர்த்த 5 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 24 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.



  • Feb 24, 2025 09:42 IST

    நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் லாரிகள்

    திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் நெல் மூட்டைகளுடன் 2 நாட்களாக 150-க்கும் மேற்பட்ட லாரிகள் காத்திருக்கும் நிலையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Feb 24, 2025 09:41 IST

    கூட்டு பாலியல் வன்கொடுமை - கழுத்தறுக்கப்பட்ட மாணவி

    கரூர் தரகம்பாடி அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் துன்புறுத்தல் 12 ஆம் வகுப்பு மாணவன் செய்து கழுத்தை அறுத்துள்ளார். படுகாயமடைந்த மாணவி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Feb 24, 2025 09:38 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

    இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். நாள் ஒன்றுக்கு ரூ. 1 கோடி வரை வருவாய் இழப்பால், 10,000க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டன. இலங்கையின் கைது நடவடிக்கையை தடுக்க ஒன்றிய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.



  • Feb 24, 2025 09:15 IST

    புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நடப்பு ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இதன் காரணமாக அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு மார்ச் 2-ஆம் தேதி வரை செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



Tamil News Live Update Tamil News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: