Coimbatore, Madurai, Trichy News Updates: காழ்ப்புணர்ச்சி காரணமாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amit shah kovai

இரண்டாவது நாளாக மீனவர்கள் போராட்டம்:

Advertisment

ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதனால், நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 1 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • Feb 25, 2025 21:45 IST

    அமித்ஷா கோவை வருகை; ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை வந்த அமித்ஷாவை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். பா.ஜ.க மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, ஈஷா சிவராத்திரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அமித்ஷா  பங்கேற்கிறார்.



  • Feb 25, 2025 20:04 IST

    காழ்ப்புணர்ச்சி காரணமாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை -  அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன்

    கோவை வடக்கு தொகுதி எம்.எல்.. அம்மன் அர்ஜூனன் வீடு மற்றும் அலுவலகத்தில் 13 மணி நேரத்துக்கும் மேலாக நடந்துவந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவடைந்தது. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சோதனை நடந்ததாக அம்மன் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Feb 25, 2025 18:56 IST

    தமிழ்நாட்டு மக்களை சீண்டிப்பார்க்க வேண்டாம் - செல்வப்பெருந்தகை

    தமிழ்நாட்டு மக்களை சீண்டிப்பார்க்க வேண்டாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்



  • Feb 25, 2025 18:27 IST

    அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கோவையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்



  • Feb 25, 2025 18:01 IST

    மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை

    மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்தது. மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம், கீழையூர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது



  • Feb 25, 2025 17:13 IST

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; எஸ்டேட் மேலாளர் நடராஜன் வரும் 27-ம் தேதி ஆஜராக உத்தரவு

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜன் வரும் 27 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சயானை கைது செய்த காவல் உதவி ஆய்வாளர் மகேஷ் குமாரிடம், கோவையில் இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சயானின் செல்போனை பறிமுதல் செய்தபோது, அதனை ஏன் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் விசாரணை நடக்கிறது 



  • Feb 25, 2025 16:38 IST

    எலி ஸ்பிரேவால் நேர்ந்த கொடுமை!

    புதுக்கோட்டையில் காருக்கு பயன்படுத்தக்கூடிய எலிக்கொல்லி ஸ்பிரேவை முகம் மற்றும் வாயில் அடித்து விளையாடிய 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.



  • Feb 25, 2025 16:17 IST

    இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம்... இளைஞர் போக்ஸோவில் கைது!

    திண்டிவனத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 16 வயது பள்ளி சிறுமியை திருமணம் செய்த ஆந்திர இளைஞர் கார்த்திக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமியை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்த நிலையில் சிறுமியின் செல்போம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில்தான் சிறுமி இன்ஸ்டாகிராமில் ஆந்திர இளைஞரிடன் பேசியது தெரியவந்துள்ளது.



  • Feb 25, 2025 15:59 IST

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு

    கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கோவிந்தராஜ் (எ)கன்னுக்குட்டி மற்றும் தாமோதரனின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Feb 25, 2025 15:58 IST

    வாழைப்பழம் விலை உயர்வு

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் கடுமையான பனி வீசுவதால் வாழைத்தார் உற்பத்தி வெகுவாக பாதிப்பு வரத்து குறைவால் அனைத்து ரக வாழைப்பழங்களின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.



  • Feb 25, 2025 15:26 IST

    விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

    மேல்மலையனூர் கோவில் தேரோட்டம் வரும் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



  • Feb 25, 2025 15:22 IST

    அம்மன் அர்ஜுனன் வீட்டிற்கு செங்கோட்டையன் வருகை

     லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறும் கோவை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டிற்கு செங்கோட்டையம் வருகை தந்துள்ளார். அம்மன் அர்ஜூனன் வீட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் இருவரும் அருகருகே அமர்ந்து பேசினர்.



  • Feb 25, 2025 14:52 IST

    நெல்லை அங்கன்வாடி மைய வாசலில் மலம் கழிப்பு

    நெல்லை மாவட்டம் அங்கன்வாடி மைய வாசலில் மலம் கழித்துள்ள மர்ம நபர்கள் அங்கன்வாடி கதவுகளில் பூசி சென்றுள்ளனர். மர்ம நபர்கள் குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 



  • Feb 25, 2025 14:16 IST

    விழுப்புரத்தில் மார்ச் 4-ம் தேதி  விடுமுறை 

    விழுப்புரம்: மேல்மலையனூர் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 4-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்தூல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்



  • Feb 25, 2025 14:11 IST

    தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிப்.28-ல் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



  • Feb 25, 2025 13:17 IST

    கடலூரில் காணாமல் போன இளைஞர்கள் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணை 

    கடலூரில் அடுத்தடுத்து காணாமல் போன இளைஞர்கள் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே எம்.புதூர் மற்றும் டி.புதூர் கிராமங்கள் உள்ளது. எம்.புதூர் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்பவரும் டி.புதூர் பகுதியை சேர்ந்த அற்புதராஜ் என்பவரும் காணவில்லை என கடந்த ஜனவரி மாதம் இறுதியில் அற்புதராஜ் பெற்றோர்களும், பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சரண்ராஜ் பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த புகாரை அடுத்து கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கடந்த 20 நாட்களாக துப்பு கிடைக்காத நிலையில் அவர்களது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நண்பர்கள் 5 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், 2 பேரையும் கொன்று புதைத்திருப்பது தெரியவந்தது.

    நெய்வேலி அருகே உள்ள என்.எல்.சி சுரங்கம் உமங்கலம் என்ற பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது புதூர் மாவட்ட காவல் காணப்பணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் தற்போது இருவரின் உடலும் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. 5 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அவர்கள் உடல்கள் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.



  • Feb 25, 2025 11:52 IST

    தி.மு.க மாணவரணி சார்பில் போராட்டம்

    இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



  • Feb 25, 2025 11:12 IST

    பதிவாளர் தேர்வு ஒத்திவைப்பு

    சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகளில் இருந்து தேர்வை ஒத்திவைக்க கோரியதால், இது குறித்து துணைவேந்தர் அறிவித்துள்ளார்.



  • Feb 25, 2025 08:44 IST

    அ.தி.மு.க எம்.எல்.ஏ வீட்டில் சோதனை

    கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நிலுவையில் உள்ள வழக்கின் பேரில், தற்போது சோதனை நடத்தப்பட்டது.



  • Feb 25, 2025 08:37 IST

    போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

    திருப்பத்தூர் மாவட்டம், ரெட்டியூர் கிராமத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் பிரபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Feb 25, 2025 08:35 IST

    இரண்டாவது நாளாக மீனவர்கள் போராட்டம்

    மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக காலவரையற்ற போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால், சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதன் மூலம் சுமார் ரூ. 1 கோடிக்கும் மேல் நாள் ஒன்றுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Tamil News Live Update Tamil News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: