/indian-express-tamil/media/media_files/2025/02/28/Y0y7IoOoyuLpgg3Rfkfj.jpg)
சேலத்தில் அரசு மருத்துவர் சஸ்பெண்ட்
சேலம் மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறிய விவகாரத்தில் அரசு மருத்துவர் உள்ளிட்ட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
-
Feb 28, 2025 21:48 IST
சிறுமி குறித்து சர்ச்சை கருத்து: மயிலாடுதுறை ஆட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
மயிலாடுதுறை : பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில், சிறுமி மீது தவறு இருந்ததாக சர்ச்சை கருத்தை ஆட்சியர் மகா பாரதி பேசியதாக வீடியோ வெளியான நிலையில் தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
Feb 28, 2025 17:11 IST
ரயில் இருந்து கர்ப்பிணி தள்ளிவிடப்பட்ட சம்பவம் - குண்டர் சட்டத்தில் கைது
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் கைதான ஹேமராஜ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்
-
Feb 28, 2025 16:18 IST
பெண் மூலம் குற்றச்சாட்டு - சீமான் விமர்சனம்
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, "நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயத்தைக் காட்டுகிறது. "நான் வளர்ந்து விடுவேனோ என்ற அச்சம் வந்துவிட்டது. என்னை சமாளிக்க முடியாமல் பெண் மூலம் குற்றம்சாட்டுகின்றனர்" எனத் தெரிவித்தார்.
-
Feb 28, 2025 14:28 IST
சேலம்: தண்ணீர் பாட்டிலால் தாக்கிக் கொண்ட தி.மு.க கவுன்சிலர்கள்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்கள் தண்ணீர் பாட்டிலால் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்குவதாக குற்றச்சாட்டு முன்னவைக்கப்பட்டுள்ளது.
-
Feb 28, 2025 13:47 IST
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 28, 2025 13:43 IST
மதுரையில் மிதமான மழை
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நாவினிப்பட்டி, தும்பைப்பட்டி, கீழையூர், கீழவளவு, திருவாதவூர், சிட்டம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துவருகிறது
-
Feb 28, 2025 13:03 IST
அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
திண்டுக்கல்: சிறுமலைக்கு செல்லும் மலைப்பாதையின் 17வது கொண்டை ஊசி வளைவு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் இருந்த பேட்டரி வயர் கொண்ட வெடிபொருளை எடுக்கும் போது வெடித்ததில் 2 காவலர்கள், வனத்துறையைச் சேர்ந்த ஒருவர் லேசான காயம். மாவட்ட எஸ்.பி. மற்றும் க்யூ பிராஞ்ச் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
Feb 28, 2025 13:02 IST
ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை
கோவை ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. எதிர்காலத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டால் உரிய அனுமதிகளை பெறவேண்டும் என ஈஷா தரப்புக்கு நீதிபதிகள் சூரியகாந்த் அமர்வு உத்தரவிட்டுள்ளது. சுற்றுசூழல் விதிகளை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்துள்ளது.
-
Feb 28, 2025 13:00 IST
"தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை" - ஆளுநர் ஆர்.என்.ரவி
“தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை; என்ன படிக்கவேண்டும் என்ற அடிப்படை உரிமை தமிழகத்தில் மறுக்கப்படுகிறது” யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கவில்லை; தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை உலகளவில் கொண்டு சென்றவர் பிரதமர் மோடி என்று நெல்லையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
-
Feb 28, 2025 12:29 IST
ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலி மர்ம மரணம்
மயிலாதுறையில் உள்ள மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலி மர்ம மரணம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என புகார். அரசு மருத்துவமனையில் அந்த செவிலியின் உறவினர்கள் குவிந்து வருகின்றனர்.
-
Feb 28, 2025 12:14 IST
விடுதியில் போதிய அடிப்படை வசதி இல்லை என புகார்
சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உணவில் பூச்சி, புழுக்கள் இருப்பதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
Feb 28, 2025 12:13 IST
உண்டியலில் பணம் திருட முயன்ற இளைஞர் கைது
கோவில் உண்டியலில் காந்தம் வைத்து நூதன முறையில் திருட இளைஞர் ஒருவர் முயற்சி செய்துள்ளார். பலமுறை, காந்தம் வைத்து உண்டியலில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
-
Feb 28, 2025 11:46 IST
கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
கிராவல் மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடும்ப அட்டை, ஆதார் அட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
Feb 28, 2025 11:35 IST
விட்டு விட்டு பெய்த லேசான மழை
மன்னார்குடி சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை. 10 நிமிடத்திற்கு ஒரு முறை விட்டு விட்டு பெய்த லேசான மழை. பயிறு வகைகளுக்கு கைகொடுத்துள்ளது இந்த மழை என்று விவசாயிகள் கருது தெரிவித்துள்ளனர்.
-
Feb 28, 2025 10:40 IST
பேருந்தில் இருந்து குதித்த பெண்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில், பேருந்தில் இருந்து கணவர் இறங்கிவிட்டதாக நினைத்து ஓடும் பேருந்தில் இருந்து குதித்த கேரளாவின் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பெண் காயமடைந்தார்.
-
Feb 28, 2025 09:57 IST
மஞ்சுவிரட்டு போட்டி போட்டி நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி போட்டி நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Feb 28, 2025 09:56 IST
வெள்ளியங்கிரி மலையில் சிவ பக்தர்கள் வழிபாடு
மகா சிவராத்திரி மற்றும் சர்வ அமாவாசையை முன்னிட்டு "தென்கயிலை" என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையில் சிவ பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் மலை உச்சியில் உள்ள சுயம்பு லிங்கத்துக்கு நடைபெற்ற பூஜையில் மேளதாளம், சங்கு முழங்க சிவ பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.
-
Feb 28, 2025 09:55 IST
செவிலியர்கள் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் பசுபதி ஸ்கேன் மையத்தில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த விவகாரத்தில், ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், செவிலியர்கள் உள்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
Feb 28, 2025 09:19 IST
பழங்குடியின மாணவி தற்கொலை
திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் பழங்குடியின மாணவி தற்கொலை செய்து கொண்டார். நிறம் குறித்து சகமாணவிகள் கிண்டல் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
-
Feb 28, 2025 09:17 IST
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 505 கன அடியாக குறைந்தது இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர் மட்டம் 109.72 அடியாகவும் நீர் இருப்பு 78.013 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
-
Feb 28, 2025 09:17 IST
மனைவியை வெட்டிய கனவருக்கு ஆயுள் தண்டனை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கருத்து வேறுபாட்டால் பிரிந்துசென்ற காதல் மனைவியை, பேருந்து நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளி மதீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ. 11,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 2014ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மேடை நடனக் கலைஞரான பிரியாவை, மதீஸ்வரன் திருமணம் செய்துள்ளார். கருத்து வேறுபாட்டால் 2017ம் ஆண்டு பிரியா பிரிந்து சென்றதுடன், கணவருடன் இருந்த தனது மகளை தன்னிடம் ஒப்படைக்ககோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
-
Feb 28, 2025 09:16 IST
சீமானுக்கு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன்
பெரியாரை இழிவாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் வழங்க உள்ளனர் காவல் ஆய்வாளர் விஜயன் தலைமையிலான போலீசார் சற்று நேரத்தில் சீமான் வீட்டுக்கு வந்து சம்மன் வழங்க இருக்கின்றனர். நேற்று, பாலியல் வழக்கில் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டதை அடுத்து விசாரிக்கச் சென்ற போலீசாரை, வீட்டின் பாதுகாவலர் தாக்கியதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
Feb 28, 2025 09:12 IST
அரசு மருத்துவர் சஸ்பெண்ட்
சேலம் மாவட்டம், வீராணம் பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூற ரூ. 15 ஆயிரம் வசூலித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ஸ்கேன் சென்டரை ஆரம்ப சுகாதார மருத்துவர் முத்தமிழ், செவிலியர் கலைமணி ஆகியோர் நடத்தியது கண்டறியப்பட்டது. இதில் அரசு மருத்துவர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.