/indian-express-tamil/media/media_files/2025/03/04/ga66Hhzl0SaJWdL86LGK.jpg)
வைகுண்டரின் அவதார தின விழா:
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொள்கின்றனர்.
-
Mar 04, 2025 21:21 IST
ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ரயில் மறியல் போராட்டம்: மீனவர் தகவல்
"தமிழ்நாடு அரசு எங்களின் கோரிக்கையை ஏற்று அளித்த உத்தரவாதத்தால் போராட்டத்தைத் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றுள்ளோம். ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர் கூறியுள்ளார்.
-
Mar 04, 2025 19:41 IST
ஆதரவற்றோருக்கு விருந்து வைத்த த.வெ.க.
த.வெ.க 2ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மேற்பார்வையில் தவெக நிர்வாகி நிறைமதி பிரியா, ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிக்கன் பிரியாணி உடன் கூடிய அசைவ விருந்து வழங்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு தேவையான பிஸ்கட் பாக்கெட்டுகள், பேரீச்சம்பழம் உள்ளிட்ட சத்தான பொருட்களை வழங்கினர் தவெக நிர்வாகிகள்..
-
Mar 04, 2025 19:41 IST
ஓசூரில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு.
பெங்களூர் பான்ஸ்வாடி என்ற பகுதியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற பெட்ரோல் டேங்கர் சரக்கு ரயில் தடம் புரண்டது. 18 எண் கொண்ட டேங்கர் தடம் புரள, ரயில்வே நிர்வாகம் மற்ற டேங்கர்களை பத்திரமாக பிரித்து பெங்களூரு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்பட்ட பகுதியில், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
-
Mar 04, 2025 18:04 IST
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களில் பூமிக்கு அடியில் தங்கம்; புவியியல் ஆய்வாளர்கள் தகவல்
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்கள், ராஜபாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் தமிழ்நாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.
-
Mar 04, 2025 17:54 IST
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: 4 பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் புதியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தாமோதரன், விஜயா, கோவிந்தராஜ் மற்றும் பரமசிவம் ஆகிய 4 பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். கடந்த மாதம் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை மார்ச் 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
Mar 04, 2025 16:40 IST
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம மரணம்
நாமக்கல் அருகே வீட்டில் சடலமாக கிடந்த தனியார் வங்கி ஊழியரான பிரேம்ராஜின் மனைவி, மகன் மற்றும் மகள் 3 பேரின் உடல்களை மீட்டு நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Mar 04, 2025 15:00 IST
2 நாட்களில் அமித்ஷா தமிழகம் வருகிறார் - அண்ணாமலை
கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "2 நாட்களில் அமித்ஷா தமிழகம் வருகிறார். அதன் பின்னர் பல மாற்றங்கள் நிகழும்" என அவர் தெரிவித்தார்.
-
Mar 04, 2025 13:47 IST
கன்னியாகுமரியில் மாயமான மாணவிகள் சென்னையில் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் கடந்த மாதம் 28-ஆம் தேதி மாயமான நிலையில், தற்போது சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் அவர்களை மீட்டனர்.
-
Mar 04, 2025 13:19 IST
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு: 22ஆம் தேதி கூட்டம்
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டம் வரும் 22-ம் தேதி குமுளியில் நடக்கிறது கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு மற்றும் கேரள அதிகாரிகளுக்கு அழைப்பு
-
Mar 04, 2025 13:05 IST
“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்”
சுதந்திரம் கிடைத்து பல ஆண்டு ஆனாலும் மன்னராட்சி, குடும்ப ஆட்சி வேண்டும் என நினைக்கின்றனர்; வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026ஆம் ஆண்டு தேர்தல் இருக்க வேண்டும் என்று சேலத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
-
Mar 04, 2025 12:52 IST
விவசாய நிலத்தில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகள்
அய்யங்கோட்டை ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் செயலால் விவசாயிகள் அதிர்ச்சி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
Mar 04, 2025 12:50 IST
'ஒருதலைபட்சமாக கெடுபிடி' - பக்தர்கள் சாலை மறியல்
திருநெல்வேலி: அய்யா வைகுண்டர் அவதார விழாவை நடத்துவதற்கு காவல்துறை ஒருதலைப்பட்சமாக கெடுபிடி விதிப்பதாக குற்றச்சாட்டு. பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் அய்யா கோயில் பக்தர்கள், கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கக்கூடாதென காவல்துறை தெரிவித்ததால், சக்கரபாவனிக்கு இடையே திடீரென சாலை மறியல்; போராட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறை கைதுசெய்த போது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு.
-
Mar 04, 2025 12:00 IST
ஜல்லி, எம்-சாண்ட் விலை உயர்வுக்கு எதிர்ப்பு
3,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், கட்டுமான பொறியாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Mar 04, 2025 11:13 IST
சாக்கு மூட்டையில் பெண் சடலம் கண்டெடுப்பு
மதுரை அவனியாபுரம் புறவழிச்சாலை ஈச்சனோடை பகுதியில் சாக்கு மூட்டையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 40 வயதுடைய பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்ற மர்ம நபர்கள்
-
Mar 04, 2025 10:40 IST
நாகையில் கிராமப்புற சுற்றுலா திட்டம் குறித்தும் ஆய்வு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுற்றுலாவாசிகளை ஈர்ப்பதற்காக விரைவில் படகு சவாரி தொடங்கப்பட உள்ளது -நேரில் அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆய்வு பிரதாபராமபுரம், பூவைத்தேடி கடற்கரையில் சுற்றுச்சூழல் மற்றும் கிராமப்புற சுற்றுலா திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.
-
Mar 04, 2025 10:39 IST
திருச்செந்தூரில் பக்தர்கள் வழிபாடு
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
-
Mar 04, 2025 10:14 IST
கோயில் பூட்டை சூலாயுதத்தால் உடைத்த மர்ம நபர்
குலசேகரப்பட்டினம் அருகே கோயில் பூட்டை சாமியின் சூலாயுதத்தால் மர்ம நபரொருவர் உடைத்து பணம் திருடியுள்ளார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 04, 2025 09:21 IST
தான் பணியாற்றிய அலுவலகத்தி பார்வையிட்ட திருமா
35 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் தான் பணியாற்றிய தடய அறிவியல் ஆய்வக அலுவலகத்தை விசிக தலைவர் திருமாவளவன் பார்வையிட்டார்
-
Mar 04, 2025 09:12 IST
அய்யா வைகுண்டர் அவதார தினம் - பக்தர்கள் ஊர்வலம்
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்பு வைகுண்டர் தலைமை பதி நோக்கி ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் செல்கின்றனர். இதில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொள்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.