/indian-express-tamil/media/media_files/2025/03/05/gfKaq1orzrjR206qaMSQ.jpg)
அரக்கோணத்தில் ட்ரோன்கள் பறக்க விட தடை:
மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அரக்கோணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர இருப்பதால், குறிப்பிட்ட இரண்டு நாட்களும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Mar 05, 2025 19:30 IST
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10-ம் தேதி புதுக்கோட்டை மாட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
-
Mar 05, 2025 19:00 IST
குட்டையில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - ஸ்டாலின் அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள பண்ணைக் குட்டையில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் நித்தின் (வயது 8) த/பெ. மணிகண்டன் என்பவர் இன்று (5.03.2025) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த விழுந்துள்ளார்.
மாணவனைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில், உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Mar 05, 2025 18:56 IST
திருப்பத்தூர், ஈரோட்டில் தலா 102 டிகிரி கொளுத்திய வெயில்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருப்பத்தூர், ஈரோட்டில் தலா 102 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து வருகின்றனர். நடப்பாண்டில் அதிகபட்ச அளவாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. சேலத்தில் 100, கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.
-
Mar 05, 2025 18:54 IST
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற மார்ச் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார். மார்ச் 10ம் தேதி விடுமுறையை ஈடுகட்ட மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும் சனிக்கிழமையை பணி நாளாக கொண்ட நிறுவனங்களுக்கு மார்ச் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
Mar 05, 2025 18:14 IST
'நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்வதில்லை' - மதுரை ஐகோர்ட் அதிருப்தி
"நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என தமிழக அரசு முடிவு செய்தது போல தெரிகிறது" என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.
-
Mar 05, 2025 18:07 IST
ஏற்காட்டில் இரவு 10 மணிக்கு மேல் மலைப்பாதையில் பயணிக்க தடை
ஏற்காட்டில் இரவு 10 மணிக்கு மேல் மலைப்பாதையில் பயணிக்க தடை விதித்து போலீசார் அதிரடி உத்தரவிட்டுள்னனர். ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில்,
குற்றங்களை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சுற்றுலா பயணிகள் போல் சமூக விரோதிகள் சோதனை சாவடியை ஈசியாக கடந்து செல்ல வாய்ப்புள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாசிகள் சோதனைக்குப் பின்னர், உரிய ஆவணம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 05, 2025 17:34 IST
வேங்கைவயல் வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது. முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் 11ம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி சம்மன் வழங்கியுள்ளனர். 3 பேரும் வீட்டில் இல்லாததால் அவர்களது குடும்பத்தினரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மனை வழங்கினர்.
-
Mar 05, 2025 17:33 IST
கோனியம்மன் கோயில் தேர் திருவிழா
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஓம் சக்தி... பராசக்தி என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகிறார்கள்.
-
Mar 05, 2025 17:15 IST
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை - வீசி சென்ற பெற்றோர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பெற்றோர் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனை கழிவறையில் வைத்து குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாகவும், அதனால் வீசி சென்றதாகவும் போலீஸ் விசாரணை குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
-
Mar 05, 2025 16:36 IST
வங்கிகளின் நடவடிக்கைள் குறித்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
திருச்சி: வங்கியில் கடன் வாங்கி முறையாக திரும்ப செலுத்தி வரும் வாடிக்கையாளரின் சொத்துக்கு உரிமை கோரி கனரா வங்கி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரிய வழக்கில், நோட்டிஸிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வங்கியில் பெரும் தொகையை கடன் பெற்று, செலுத்தாதவர்கள் மீது வங்கி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை ஆனால், சாதாரண மக்கள் மீது வங்கிகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
Mar 05, 2025 13:27 IST
தருமபுரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் மரணம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சரக்கு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். தர்மபுரி அருகே ஜிட்டாண்டஅள்ளி பிரிவு சாலை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் முனிகிருஷ்ணன், பசவராஜ் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்
-
Mar 05, 2025 13:01 IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி
மதுரை: டங்க்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அரிட்டாப்பட்டி கிராமத்தில் நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின் படி, அக்கிராமத்தில் 17 திட்டப்பணிகளுக்கு இன்று அமைச்சர் மூர்த்தி அடிக்கல் நாட்டி வைத்தார்
-
Mar 05, 2025 12:29 IST
உடல் நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் தேர்வு எழுதிய மாணவி
நீலகிரி: கூடலூரை அடுத்த பாட்டவயல் பகுதியில் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவி ஜாஸ்மின், ஆம்புலன்ஸ் மூலம் Stretcher-ல் அழைத்து வரப்பட்டு 11ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார். உடல் நலக்குறைவு ஏற்பட்ட போதிலும், மனம் தளராமல் உதவியாளர் மூலம் தேர்வை எழுதிய மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
-
Mar 05, 2025 12:20 IST
நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி: நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025-26ம் கல்வியாண்டில் புதியதாக சேர்க்கைக்கு வந்த மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்தும், கல்வி உபகரணங்கள் வழங்கியும் வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்
-
Mar 05, 2025 11:40 IST
பாரதியார் பல்கலை. வளாகத்தில் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு
கோவை: பாரதியார் பல்கலை. வளாகத்தில் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டதால் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். கோவை சரக வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடத்தை உறுதிப்படுத்திய நிலையில், சிறுத்தையை கண்டறிய கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Mar 05, 2025 11:18 IST
அதிமுக கூட்டத்தில் நிர்வாகிக்கு அடி உதை
ஈரோடு: கோபியில் செங்கோட்டையன் தலைமையில் அதிமுக கூட்டத்தில் நிர்வாகிக்கு அடி உதை. அந்தியூர் நிர்வாகிகளை எந்த கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படுவது இல்லை எனக்கூறிய நிர்வாகியை, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தாக்கி விரட்டினர். இதனை அடுத்து, புகார் கூறியவரை மேடைக்கு அழைத்துப் பேசினார் செங்கோட்டையன்.
-
Mar 05, 2025 10:05 IST
பங்குனி பெருவிழா கொடியேற்றம்
திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா இன்று (மார்ச் 5) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
-
Mar 05, 2025 08:43 IST
போக்சோவில் முதியவர் கைது
ஈரோடு மாவட்டம், பவானி அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 53 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வேலைக்கு சென்ற இடத்தில் அப்பட்டறையின் உரிமையாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வந்தது.
-
Mar 05, 2025 07:25 IST
பனிமயமாதா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்தவர்களின் தவக் காலமான சாம்பல் புதன் இன்று தொடங்கிய நிலையில், தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
-
Mar 05, 2025 07:22 IST
2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க விட தடை
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (மார்ச் 6) வருகை தருகிறார். இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 7) ஆகிய 2 நாட்களும் அரக்கோணத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.