/indian-express-tamil/media/media_files/2025/03/16/pG2V5vuNSWyzJs7OBMQL.jpg)
கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு
அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஸ் பாண்டியன் (22) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். எம்.காம். பட்டதாரியான மகேஸ் பாண்டியன், சீனாவில் பணியாற்றி வந்தார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், இன்று நடந்த ஜல்லிக்கட்டி பங்கேற்று மாடுமுட்டி உயிரிழந்துள்ளார்.
-
Mar 16, 2025 17:51 IST
வேடசந்தூர்: சாலை விபத்தில் 60 வயது முதியவர் உயிரிழப்பு
கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தமனம்பட்டி பிரிவு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற முத்துசாமி என்பவர் கார் மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிவந்த சிவகங்கை அரசு மருத்துவர் தாமரைக்கண்ணன் காயமின்றி உயிர் தப்பினார்.
-
Mar 16, 2025 16:07 IST
4-ம் தேதி கும்பாபிஷேகம்: மருதமலை கோயிலில் திருப்பணிகள் தீவிரம்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
Mar 16, 2025 15:14 IST
கரூர்: ஓடும் போதே பற்றி எரிந்த ஆம்னி வேன் - பரபரப்பு
கரூரில், மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளே இருந்தவர்கள் உடனடியாக வெளியேறிதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
-
Mar 16, 2025 15:06 IST
திருநாகேஸ்வரத்தில் இளையராஜா சுவாமி தரிசனம்
கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோயிலில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார். ரகு பகவான் சன்னத்திக்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
-
Mar 16, 2025 14:46 IST
திருச்செந்தூரில் மூச்சுத்திணறி பக்தர் மரணம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். ஞாயிறு விடுமுறை நாளில் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்
-
Mar 16, 2025 14:24 IST
திருப்பூர் துணி ஆலையில் தீ விபத்து; சுமார் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
திருப்பூர் வளையங்காடு பகுதியில் துணி ஆலையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சுமார் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
Mar 16, 2025 13:51 IST
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து; மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் குளிரூட்டும் அறையில் மின் வயர்கள் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு பணி 13 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்
-
Mar 16, 2025 13:43 IST
நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் மரணம்
நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66.
-
Mar 16, 2025 12:29 IST
விக்கிரவாண்டி காவல் நிலைய காவலர் சீனிவாசன் மாரடைப்பால் மரணம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் காவலராக உள்ள சீனிவாசன் மாரடைப்பால் உயிரிழந்தார். தொரவி என்ற பகுதியில் மதுபாட்டில்களை கடத்திய நபர்களை பிடிக்க விரட்டிச் சென்ற போது மயங்கி விழுந்துள்ளார்
-
Mar 16, 2025 10:12 IST
ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக மதுரையில் ஜல்லிக்கட்டு
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக மதுரையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
-
Mar 16, 2025 07:56 IST
டெங்கு காய்ச்சலால் 9-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
வேலூரில், டெங்கு காய்ச்சலால் 9-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். முடினாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிறுநீரகம், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்தார்.
-
Mar 16, 2025 07:30 IST
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.