/indian-express-tamil/media/media_files/dizWQZmghSEgUKblvHq9.jpg)
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் ஆய்வு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முதலாவது மற்றும் 2வது அலகு முற்றிலும் எரிந்து சேதமான நிலையில், மின்சார வாரிய அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து இன்று ஆய்வு செய்ய உள்ளனர். விபத்து காரணமாக 3 அலகுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் 630 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 3 அலகுகளில் மின் உற்பத்தி துவங்க 6 மாதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 17, 2025 21:35 IST
திருப்பூரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு அறைக்கு உள்ளே செல்போன் பயன்படுத்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!
திருப்பூரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு அறைக்கு உள்ளே செல்போன் பயன்படுத்திய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கு தேர்வு அலுவலராக சென்ற ஊத்துக்குளி அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன், விதிகளை மீறி தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Mar 17, 2025 20:07 IST
செயின் பறிப்பில் காது அறுத்த சம்பவம்... பாட்டி மன்னிச்சிரு... கொள்ளையன் கண்ணீர் கடிதம்!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மூதாட்டியிடம் கத்தியை காட்டி செயினை பறித்து சென்ற திருடன், கொள்ளையில் மூதாட்டியின் காது அறுந்தது; குற்றவுணர்ச்சி தாங்க முடியாமல் `கண்ணீருடன் மன்னிப்புக்கடிதம்' எழுதி சட்டை பையில் வைத்திருந்தவரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 17, 2025 18:14 IST
சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
தமிழகத்தின் சில பகுதிகளில் வரும் 22-ஆம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்பேரில், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கனமழை பெய்தது.
-
Mar 17, 2025 16:34 IST
கோவிலில் பெண்ணை முட்டிய மாடு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு வந்த பெண் பக்தர் மீது கோவில் வளாகத்தில் சுற்றி திரிந்த மாடு முட்டியத்தில் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Mar 17, 2025 16:15 IST
கடல் சீற்றம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சென்னையில் இருந்து நாகை வரையிலான கடற்பகுதியில் 8 முதல் 12 அடி வரை கடல் சீற்றத்துடன் காண வாய்ப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் கடலுக்கும், கடற்கரை பரப்புக்கும் செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
-
Mar 17, 2025 16:04 IST
ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் ஆய்வு
சென்னை அருகேயுள்ள ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு ஏரியில் கடந்த சில தினங்களாக டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதக்கிறது. சென்னை பல்கலை. முன்னாள் பேராசிரியர் முனைவர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஏரியில் ஆய்வு செய்து வருகிறது. மாசடைந்த ஏரி நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்த நிலையில் ஏரியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
-
Mar 17, 2025 15:45 IST
11 கிலோ கஞ்சா பறிமுதல்
திருத்தணி அருகே பொன்பாடி சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்திவந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக திருவெற்றியூரைச் சேர்ந்த தினேஷ், ஆஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
Mar 17, 2025 13:35 IST
திருப்பூர்: பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல்
திருப்பூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
-
Mar 17, 2025 13:34 IST
திண்டுக்கல்: விரைவு ரயில் ரூ.14 லட்சம் ஹவாலா பணம் கடத்தல் - ஒருவர் கைது
டெல்லியில் இருந்து கன்னியாகுமரி சென்ற திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில், திண்டுக்கல்லில் வைத்து ரூ.14 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நவநீதகிருஷ்ணன் என்பவரை பிடித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா தொடர்பாக முன்பதிவில்லா பெட்டியில் சோதனை செய்தபோது ஹவாலா பணம் சிக்கி உள்ளது.
-
Mar 17, 2025 13:21 IST
பெட்ரோல் குண்டு வீச முயன்ற 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
கோவையில் பாஜக பிரமுகர் மணிகண்டனுக்கு சொந்தமான வணிக வளாகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நாசர் பாஷா உள்பட 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. மணிகண்டனிடம் வேலை பார்த்துவந்த நாசர் பாஷா, தனக்கு 5,000 ரூபாய் கடன் கொடுக்க மணிகண்டன் மறுத்ததால், மது போதையிலிருந்த தனது நண்பர்களின் பேச்சை கேட்டு பெட்ரோல் குண்டு வீச சென்றதாக கூறப்படுகிறது.
-
Mar 17, 2025 13:18 IST
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் ஆய்வு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முதலாவது மற்றும் 2வது அலகு முற்றிலும் எரிந்து சேதமான நிலையில், மின்சார வாரிய அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து இன்று ஆய்வு செய்ய உள்ளனர். விபத்து காரணமாக 3 அலகுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் 630 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 3 அலகுகளில் மின் உற்பத்தி துவங்க 6 மாதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 17, 2025 12:49 IST
பேச்சை நிறுத்திய காதலிக்கு கொடூர மரணத்தை கொடுத்த காதலன்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக விலகி இருந்த இளம்பெண்ணை மீண்டும் காதலிக்க வற்புறுத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதலன், உடலை கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் போலீஸ் அகாடமியில் படித்து வந்த சக்திவேலும், ரோஷிணியும் காதலித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ரோஷிணி பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அவரை சந்தித்து மீண்டும் காதலிக்க வற்புறுத்திய சக்திவேல், அவரை கொலை செய்து உடலை கிணற்றுக்குள் வீசியுள்ளார். இதுகுறித்து ரோஷினியிடம் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.
-
Mar 17, 2025 12:03 IST
கோச்சில் நாசியை துளைத்த துர்நாற்றம் நின்ற ரயில்.. அதிகாரிகளை விளாசிய மக்கள்
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் ரயிலை நிறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி சென்னை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் கோபமடைந்த பயணிகள் நெல்லை சந்திப்பிலிருந்து ரயில் கிளம்பியபோது, சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரயில் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது
-
Mar 17, 2025 10:44 IST
திருச்சி - பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்
கரூர் அருகே மூர்த்திபாளையம் ரயில்வே யார்டில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்.56106) நாளை(செவ்வாய்க்கிழமை) கரூரில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரை இயக்கப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது.
ஈரோடு சந்திப்பில் இருந்து கரூர் சந்திப்பிற்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் ஒன்று நாளை காலை 5.20 மணிக்கு இயக்கப்படும். திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில்(56809) திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூரில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். மூர்த்திபாளையம் ரயில்வே யார்டில் பணிகள் முடிந்ததும் கரூரில் இருந்து ஈரோட்டிற்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.
திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில்(56809) வருகிற 20-ம் தேதி திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூரில் நிறுத்தப்படும். இந்த ரயில் கரூரில் இருந்து ஈரோட்டிற்கு இயக்கப்படாது. திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ்(16843) வருகிற 20-ம் தேதி திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூரில் நிறுத்தப்படும். மூர்த்திபாளையத்தில் பணிகள் முடிந்ததும் கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.
-
Mar 17, 2025 09:21 IST
கோவையில் சாலையில் சுற்றிய மாடுகள் கோசாலையில் அடைப்பு
கோவையில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை கோவை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று கோசாலையில் அடைத்தனர். கோவை மாநகராட்சியின் புல்லுக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண் மற்றும் அவரது 5 மாத குழந்தையை மாடு முட்டியதில் படுகாயமடைந்தார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், புல்லுக்காடு பகுதியில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
Mar 17, 2025 09:03 IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்து தப்பியோடிய கடத்தல் காரர்களை தேடி வருகின்றனர்.
-
Mar 17, 2025 09:02 IST
பாஜக நிர்வாகிகளுக்கு வீட்டுக்காவல்
கடலூர் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்ட கடலூர் பாஜக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
Mar 17, 2025 09:00 IST
நகைக்காக மூதாட்டி கொலை
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த, அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Mar 17, 2025 08:53 IST
அரூர் வருவாய் கோட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு அரூர் வருவாய் கோட்டத்திற்கு நாளை (மார்ச் 18) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 29-ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.