Coimbatore, Madurai, Trichy News Updates: மரக்காணத்தில் பேருந்தில் நகை திருட்டு: அக்கா -தங்கை இருவர் கைது

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Plice arrest

மீனாட்சியம்மன் கோயில் நடை இன்று அடைப்பு:

Advertisment

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் திருக்கல்யாணம் நிகழ்வை முன்னிட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை இன்று அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்தில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் சாமிகள் பங்கேற்பதால் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

  • Mar 18, 2025 21:24 IST

    மரக்காணத்தில் பேருந்தில் நகை திருட்டு: அக்கா -தங்கை இருவர் கைது

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து பேருந்தில் பயணித்த ஒருவரின், கைப்பையில் இருந்து, 5 சவரன் நகையை கொள்ளையடித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரு பெண்களும் ஒரே நபரை திருமணம் செய்துகொண்ட அக்கா தங்கைகள் என்பது தெரியவந்துள்ளது.



  • Mar 18, 2025 20:44 IST

    1008 பால்குடம் - அம்மனுக்கு மஹா அபிஷேகம்

    திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு 1008 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்லமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.



  • Advertisment
    Advertisements
  • Mar 18, 2025 20:40 IST

    புதுக்கோட்டை விபத்தில் பள்ளிக் குழந்தைகள் படுகாயம்: அண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

    புதுக்கோட்டை அருகே, பள்ளி வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 15க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. குழந்தைகள் அனைவரும் விரைந்து நலம்பெற, இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கும்படி, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Mar 18, 2025 20:12 IST

    நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை: இ.பி.எஸ். கண்டனம்

    நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. "இதற்கெல்லாம் என்னதான் முதல்வர் ஸ்டாலின் பதில் வைத்திருக்கிறார்? தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிசத்தை தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு? ஜாகீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.



  • Mar 18, 2025 17:15 IST

    திருநெல்வேலி அறிவியல் மைய பெயர்ப்பலகையில் இந்தி

    திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் பெயர்ப்பலகையில் இதுவரை தமிழ், ஆங்கிலம் இடம்பெற்றிருந்த நிலையில், இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் இந்த அறியவில் மையம் செயல்படுகிறது.



  • Mar 18, 2025 16:57 IST

    மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மூன்று ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Mar 18, 2025 16:11 IST

    காங்கிரஸ் - பா.ஜ.க இடையே வாக்குவாதம்

    சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி பா.ஜ.க உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்.



  • Mar 18, 2025 14:52 IST

    விழுப்புரம்: இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் - துப்புரவு ஆய்வாளர் கைது

    விழுப்புரம் நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய துப்புரவு ஆய்வாளர் மதன் குமாரை கைது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். முறைகேடாக அவர் பிறப்பு/ இறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Mar 18, 2025 14:22 IST

    பல்லடம் கொலை வழக்கு - சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலை கவுண்டம்பாளையத்தில் கடந்தாண்டு நவம்பரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.



  • Mar 18, 2025 13:44 IST

    சிவகாசி: தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே மோதல் - பரபரப்பு

    சிவகாசி மாநகராட்சி அவசர கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது மேஜை தள்ளிவிட்ட மற்றொரு உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது. கடும் வாக்குவாதம் காரணமாக, போலீஸ் பாதுகாப்புடன் சிவகாசி மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது



  • Mar 18, 2025 12:42 IST

    மே 16 முதல் 21 வரை உதகையில் மலர்கண்காட்சி

    கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் மலர் கண்காட்சி மே 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உதகை ரோஜா கண்காட்சி மே 10 முதல் 12 வரை நடைபெறும்; கோத்தகிரி 13ஆவது காய்கறி கண்காட்சி மே 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடைபெறும்; குன்னூர் 65ஆவது பழக்காட்சி மே 23 முதல் 25 வரை நடைபெற உள்ளது



  • Mar 18, 2025 12:39 IST

    அண்ணாமலை கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    கோவை பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், "மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்" என பாஜகவினரே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு!



  • Mar 18, 2025 12:24 IST

    ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கொலை - இருவர் சரண்

    நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட விவகாரம். கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகிய இருவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரண்



  • Mar 18, 2025 12:22 IST

    ராமேஸ்வரம் - தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. இதில் ரூ.50 டிக்கெட் பெற்று வரிசையில் சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் மாவட்டம் சிவாட்பாரி பகுதியைச் சேர்ந்த ராஜ்தாஸ் (59) என்ற பக்தர் மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசாரின் உதவியோடு கோயில் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்



  • Mar 18, 2025 12:00 IST

    மது போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்

    10-க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி மது போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள். அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்



  • Mar 18, 2025 11:44 IST

    தர்மபுரியில் யானையை வேட்டையாடிய இருவர் கைது

    தர்மபுரி அடுத்த ஏமனூர் வனப்பகுதியில் யானையை வேட்டையாடி தந்தங்களை வெட்டி எடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யானையின் தந்தங்கள் சேலம் காரைக்காடு கிராமத்தில் பறிமுதல்



  • Mar 18, 2025 11:43 IST

    நெல்லையில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

    நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் நனைத்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்தது



  • Mar 18, 2025 11:34 IST

    பள்ளியை மூட எதிர்ப்பு - மாணவர்கள் போராட்டம்

    கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளி நடப்பாண்டுடன் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள், பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 



  • Mar 18, 2025 11:32 IST

    திருவானைக்கோவில் பங்குனி தேரோட்டம் - 30ஆம் தேதி

    திருவானைக்கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் நடைபெற உள்ள பங்குனி திருத்தேரட்டத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை  சாமி தேருக்கும், அம்மன் தேருக்கும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. முன்னதாக, முகூர்த்த காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முகூர்த்தக்கால் நுனியில் மா இலை, பூக்கள் சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் கட்டப்பட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது. அப்பொழுது கோயில் யானை அகிலா முகூர்த்த காலைத் தொட்டு ஆசீர்வதித்தது. திருவானைக்கோவில் பங்குனி தேரோட்டம் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 20 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் வே சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



  • Mar 18, 2025 11:14 IST

    "மார்ச் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்"

    விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் இயக்குநர் அறிவுறுத்தல். விவசாயிகள் தனி அடையாள எண் பெறாவிடில், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் <6,000 பெற முடியாது; திருவாரூர் மாவட்டத்தில் தனி அடையாள எண் பெற 37,500 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர் - வேளாண்துறை



  • Mar 18, 2025 11:05 IST

    பட்டுக்கோட்டை அருகே மாரடைப்பால் திடீரென உயிரிழந்த தாய்.

    கண்ணீர் மல்க விடைபெற்று உயிரியல் தேர்வு எழுதச்சென்ற மாணவி காவியா. காவியாவின் தந்தை ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர் என்பதாலும், உயிரிழந்த தாய் கலாவின் உழைப்பை மட்டுமே அக்குடும்பம் நம்பியிருந்ததால் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை  



  • Mar 18, 2025 10:36 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.



  • Mar 18, 2025 09:17 IST

    பூமிக்கு திரும்ப தயாராகும் டிராகன் விண்கலம்

    சர்வதேச விண்வெளி மையத்தில் டாக்கிங் செய்யப்பட்ட டிராகன் விண்கலத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி விண்வெளி வீரர்கள் மாறினர். பூமியில் இருந்து 450 கிலோ மீட்டர் உயரத்தில் 9 மாதங்களுக்கு மேலாக சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட 4 பேரை பூமிக்கு அழைத்துவர எலான் மஸ்கின் டிராகன் விண்கலம் தயாராக உள்ளது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரும் நாளை அதிகாலை பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Mar 18, 2025 09:14 IST

    பிரியாணியால் கரப்பான் பூச்சி

    திருப்பத்தூரில் சிக்கன் பிரியாணியில் கரப்பான் ​​பூச்சி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தனர். நீயே கரப்பான் பூச்சியை போட்டு இருப்பாய் என ஓட்டல் உரிமையாளர் அடாவடியாக பேசியதாக கூறப்படுகிறது. 



  • Mar 18, 2025 09:12 IST

    மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு

    திருப்பரங்குன்றம் முருகன்கோயில் திருக்கல்யாணத்தை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை இன்று சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 18, 2025 09:11 IST

    ராமேஸ்வரம் கோயிலில் மயங்கி விழுந்து பக்தர் பலி

    ராமேஸ்வரம் கோயிலில் வரிசையில் நின்று கொண்டிருந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஸ்படிகலிங்க தரிசனத்திற்காக டிக்கெட் பெற்று வரிசையில் நின்ற ராஜ்தாஸ் என்பவர் உயிரிழந்தார். ராஜஸ்தானை சேர்ந்த சன்னியாசி ராஜ்தாஸ் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  



  • Mar 18, 2025 09:02 IST

    ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை

    திருநெல்வேலியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் பிஜில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான 32 சென்ட் இடப் பிரச்சனை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்ததாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



Tamil News Update Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: