/indian-express-tamil/media/media_files/2025/03/19/QePyDT8TfZHL1jTwJdIf.jpg)
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரோட்டம்
பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
-
Mar 19, 2025 22:16 IST
இளைஞர் தற்கொலை - பயிற்சி எஸ்ஐ சஸ்பெண்ட்
நாமக்கல் அருகே இளைஞர் தற்கொலை செய்த விவகாரத்தில் வேலகவுண்டம்பட்டி காவல்நிலையம் முன் இளைஞர் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பயிற்சி எஸ்ஐ மோகன் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
-
Mar 19, 2025 22:14 IST
பழனி முருகன் கோவிலில் பக்தர் உயிரிழப்பு
திண்டுக்கல்,பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஐயப்ப பக்தர் செல்வமணி என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மரணமடைந்தார்.
-
Mar 19, 2025 18:57 IST
தமிழக எல்லைக்குள் நாய்களை விட்ட கேரளா; ரூ.2 லட்சம் அபராதம்
திருவனந்தபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 20 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வாகனத்தில் ஏற்றி வந்து குமரி மாவட்ட எல்லைக்குள் விட முயன்றவர்களை விரட்டி பிடித்த பொதுமக்கள், மீண்டும் அதே வாகனத்தில் நாய்களை எற்ற வைத்தனர். நாய்களைவிட்ட சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
Mar 19, 2025 17:01 IST
நெல்லையில் போலீசார் துப்பாக்கிச் சூடு
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த முகமது தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை சுற்றி வளைத்துப் பிடிக்கும் போது, அவர் எதிர் தாக்குதலில் ஈடுபட்டதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
-
Mar 19, 2025 16:09 IST
டி.ஐ.ஜி வருண்குமார் மீதான புகாரை பரிசீலிக்க டி.ஜி.பி-க்கு உத்தரவு
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை, டி.ஜி.பி பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்த புகாரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
Mar 19, 2025 14:53 IST
சேலம் ரவுடி கொலை வழக்கு - 3 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிப்பு
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சேலத்தைச் சேர்ந்த ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூவர் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டனர். சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய மூவரும் சுட்டுப் பிடிக்கப்பட்டனர். இவர்கள் உள்பட 4 பேர் கைது. மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
Mar 19, 2025 14:15 IST
ஜாகிர் உசேன் கொலை - நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
நெல்லையில் ஓய்வு எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை வழக்கு தொடர்பாக டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமானி உத்தரவு ஜாகிர் உசேன் தொடர்புடைய முந்தைய வழக்குகளை முறையாக விசாரிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாகிர் உசேன் உறவினர்களிடம் உத்தரவாதம் அளித்தப்படி இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Mar 19, 2025 14:11 IST
ஈரோடு: தேசிய நெடுஞ்சாலையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு; சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஜான் - ஆதிரா தம்பதியை வழிமறித்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Mar 19, 2025 13:29 IST
திருத்தணி அருகே ஒன்றரை வயது குழந்தையை கடித்து குதறிய நாய்
திருத்தணி அருகே ஒன்றரை வயது குழந்தையை கடித்து குதறிய நாய் வெறிநாய் கடித்ததால் குழந்தையின் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது, குழந்தையின் உயிரை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Mar 19, 2025 13:06 IST
ஆட்டோ கவிழ்ந்து விபத்து- பள்ளி மாணவி பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து பள்ளி மாணவி பலி. மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையை ஆட்டோ கடக்க முயன்ற போது நேர்ந்த விபத்து மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது மாணவி உயிரிழந்தார்
-
Mar 19, 2025 12:24 IST
உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம்
திருநெல்வேலி: காவல் ஆணையரோடு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் “இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்கிறேன் என கமிஷனர் உறுதியளித்துள்ளார்; அதனால்தான் உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்தோம்; ஒருவேளை சஸ்பெண்ட் செய்யாவிட்டால், உடலுடன் போராடுவோம்” என ஜாகிர் உசேனின் மகன் இச்சூர் ரகுமான் பேட்டி
-
Mar 19, 2025 12:08 IST
குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெல்லையில் ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் குற்றவாளிகள், அதன் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர்; சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
-
Mar 19, 2025 11:47 IST
நெல்லை கொலை - பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை தொடர்பான வழக்கில் எதிரக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று 3 மாதங்களுக்கு முன்பே ஜாகிர் உசேன் புகாரளித்துள்ளார்; யார் மீது புகாரளித்தாரோ அவர்களை அழைத்தே காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக தகவல்; உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈபிஎஸ்
-
Mar 19, 2025 11:34 IST
கோவையில் கோடை வெயில் தாக்கம்
கோடை வெயில் தாக்கம் - கோவை மாநகரில் பணிபுரியும் 230 போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி, கண்ணாடி மற்றும் மோர் வழங்கப்பட்டன. குளிர்ச்சியான மோர் குடித்தபடி கூலாக போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட பெண் காவலர்கள்!
-
Mar 19, 2025 11:13 IST
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை தொடங்கிய தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின ஆணையம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணைய மூத்த விசாரணை அதிகாரி லிஸ்ட்டர் உள்ளிட்டோர் விசாரணை. மாணவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் போது மற்றும் தற்போதைய நிலை குறித்து மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை
-
Mar 19, 2025 10:37 IST
நாகர்கோயில் பகுதியில் மக்கும், குப்பை மக்கா குப்பைகள் வசதி ஏற்படுத்தி தர வாய்ப்புள்ளதா? -அமைச்சர் பதில்
நாகர்கோயில் பகுதியில் மக்கும், குப்பை மக்கா குப்பைகள் வசதி ஏற்படுத்தி தர வாய்ப்புள்ளதா? என்ற தளவாய் சுந்தரம் கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் குப்பைகள் கிடங்கிறகு இடம் கிடைப்பது சிரமம். பொதுமக்கள் வீடுகளிலே மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்து தரப்படும். குப்பை கொட்டும் கிடங்கு அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.
-
Mar 19, 2025 09:40 IST
திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் வெளியே தெரிந்ததால் நீண்டதூரம் கடலுக்குள் சென்று பக்தர்கள் நீராடினர்.
-
Mar 19, 2025 09:38 IST
திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
ஜவுளி உற்பத்தியாளர்கள் 2022ல் அறிவித்த கூலி உயர்வை வழங்கவேண்டுமென வலியுறுத்தி திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Mar 19, 2025 09:22 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
Mar 19, 2025 09:20 IST
திருச்சி விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட ஒன்றிய அரசு திட்டம்.
திருச்சி விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. விமான நிலையங்கள் தனியார் மயமாக்கல்ொடர்பான கேள்விக்கு 11 விமான நிலையங்கள் பொது தனியார் கூட்டாண்மை அடிப்படையில் குத்தகைக்கு விட அடையாளம் கண்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்துத்துறை பதில் அளித்துள்ளது.
-
Mar 19, 2025 09:18 IST
ஒன்றரை வயது குழந்தையை கடித்த வெறிநாய்
திருத்தணியில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை வெறிநாய் கடித்துள்ளது. உயிருக்கு போராடி ஆபத்தான நிலையில் குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு ரூ. 4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Mar 19, 2025 09:15 IST
மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ ஜாகீர் உசைன் கொலை வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது. இதில் ஏற்கனவே இரண்டு பேர் சரணடைந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி நூருண்ணிசா ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.