/indian-express-tamil/media/media_files/2025/03/21/GYzitC571vbPV8PD3fyu.jpg)
நெல்லையப்பர் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி:
திருநெல்வேலி மாவட்டம், நெல்லையப்பர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ரூ. 20 லட்சத்து 44 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது.
-
Mar 21, 2025 20:59 IST
தூத்துக்குடியில் ரிசர்வ் வங்கியின் புதிய நகைக்கடன் விதி குறித்து பொதுமக்கள் புகார்
தூத்துக்குடி: பேட்மாநகரம் பகுதியில் நடந்த கடன் மேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பிராந்திய மூத்த மேலாளரிடம், ரிசர்வ் வங்கியின் புதிய நகைக்கடன் விதி குறித்து பொதுமக்கள் புகார் வட்டி மட்டும் செலுத்தி மறுஅடகு செய்வது என்ற பழைய விதியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் இதே கருத்துதான் வரப்பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்கிறோம்” என அவர் பதில் அளித்துள்ளார்.
-
Mar 21, 2025 20:00 IST
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை
திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில் கடந்த நவம்பரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
Mar 21, 2025 18:53 IST
மதுரையில் போலீஸ் வாகனங்கள் ஏலம்
மதுரை, மார்ச் 21: தமிழ்நாடு சிறப்புக்காவல் 6-ம் அணி, மதுரையில் உள்ள அலுவலக வளாகத்தில் பழமையான மற்றும் பயன்பாட்டிற்கு சுட்டிகாட்டப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலத்தில் விற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொதுஏலம் வருகிற 27.03.2025 அன்று காலை 10.00 மணிக்கு, தமிழ்நாடு சிறப்புக்காவல் 6-ம் அணி, மதுரை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
ஏலத்திற்குரிய காவல் வாகனங்கள், 24.03.2025 அன்று காலை 10.00 மணி முதல், ஏலம் நடைபெறும் நேரம் வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள், 24.03.2025 அன்று காலை 10.00 மணி வரை ரூ.1000/- முன் வைப்பு தொகையை செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு சிறப்புக்காவல் 6-ம் அணி தெரிவித்துள்ளது.
மேலும், ஏலத்தில் வெற்றிபெறும் நபர்கள், வாகனங்களுக்கான ஏலத் தொகை மற்றும் அதனுடன் சேர்த்து விற்பனை வரி (GST) ஆகியவற்றை 27.03.2025 அன்று உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Mar 21, 2025 18:45 IST
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், பணியாற்றி வரும் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் (D.D.C ஹால்) சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டம் வருகிற 25-03-2025 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர் இக்கூட்டத்தில் 25-03-2025 அன்று காலை 10.30 மணிக்கு முன்னிலையாகி, தங்கள் குறைகளை இரட்டை பிரதிகளில் மனுவாக அளித்து, அதன் மூலம் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
Mar 21, 2025 18:41 IST
ஆலங்குடி போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் நல்லதம்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தனியார் வாகனத்திற்கு ஆயுள் வரி செலுத்துவதாகக் கூறி வாகன உரிமையாளரிடம் இருந்து ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. வாகன உரிமையாளர் புகாரில் போக்குவரத்து ஆய்வாளர் நல்லதம்பியை போக்குவரத்து ஆணையர் சஸ்பெண்ட் செய்தார்.
-
Mar 21, 2025 18:31 IST
மணிமுத்தாறு குறுக்கே ஆற்றுப்பாலம் கட்ட உத்தரவு
மணிமுத்தாறு குறுக்கே 4 மாதத்திற்குள் ஆற்றுப்பாலம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மேமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.சுதாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.11.57 கோடியில் மணிமுத்தாறு குறுக்கே ஆற்றுப்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 4 மாதங்களில் பாலம் கட்டும் பணியை தொடங்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
-
Mar 21, 2025 17:54 IST
மதுரை எய்ம்ஸில் 26% பணிகள் நிறைவு – மத்திய அமைச்சர்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியை விடுவிப்பதில் எந்த காலதாமதமும் இல்லை. ரூ.2021.51 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் யாதவ் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார். மேலும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் தற்போது வரை 26 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஜப்பானை சேர்ந்த நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி திட்டத்தை 2026 அக்டோபருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் யாதவ் தெரிவித்துள்ளார்
-
Mar 21, 2025 17:32 IST
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு தான் அதிகாரம் - ஐகோர்ட்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. மாநில அரசுக்கு கிடையாது என சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது
-
Mar 21, 2025 17:00 IST
புதுகோட்டையில் மோசடி புகாரில் போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் வாகனத்திற்கு செலுத்தப்பட்ட ஆயுள் வரி ரூ.3 லட்சத்தை மோசடி செய்த புகாரில் போக்குவரத்து ஆய்வாளர் நல்ல தம்பியை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். வாகன உரிமையாளரிடம் நல்ல தம்பி பெற்ற ரூ.3 லட்சம் பணம் அவரிடம் இருந்து பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு வரியாக செலுத்தப்பட்டுள்ளது.
-
Mar 21, 2025 16:57 IST
பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.4.50 லட்சம் அபராதம் - இலங்கை கோர்ட் உத்தரவு
கடந்த 6-ம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் 14 பேருக்கு இலங்கை பணத்தில் தலா ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்தார்.
-
Mar 21, 2025 14:40 IST
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 21, 2025 14:24 IST
வேலூரில் கல்லூரி துணை முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு
வேலூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி துணை முதல்வர் மீதான பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக, அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
-
Mar 21, 2025 14:20 IST
மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் கடத்தல்
மதுரையில் ஆட்சியர் அலுவலக சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், கடத்தப்பட்ட நபர் யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
Mar 21, 2025 12:00 IST
சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கைது
கடலூர் அருகே மலைஅடி குப்பம் கிராமத்திற்கு தடையை மீறி முந்திரி கன்றுகள் நடும் விழாவிற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கைது. ஆக்கிரமிப்பு நிலங்களில் வளர்க்கப்பட்ட முந்திரி மரங்கள் 2 மாதங்களுக்கு முன்னர் வெட்டப்பட்டன; இதனை எதிர்த்து முந்திரி மரக் கன்றுகள் நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது
-
Mar 21, 2025 11:50 IST
போராட்டக்காரர்கள் - போலீஸார் இடையே வாக்குவாதம்
கடலூர்: மலையடி குப்பம் பகுதியில் விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு அகில இந்திய விவசாய சங்கத்தினரும் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினரும் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
-
Mar 21, 2025 11:48 IST
ரயிலை கவிழ்க்க சதி - விசாரணை தீவிரம்
கன்னியாகுமரி இரணியல் அருகே ரயில் தண்டாவளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம். மர்ம நபர்களை பிடிக்க மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை
-
Mar 21, 2025 11:32 IST
இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை. சடலத்தை முட்புதரில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்... சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி விசாரணை.
-
Mar 21, 2025 11:13 IST
‘புதுச்சேரியில் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்'
புதுச்சேரியில் இந்த கல்வியாண்டில் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறையில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் நமச்சிவாயம்
-
Mar 21, 2025 10:39 IST
கலைஞர் நூலகத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்
திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்படவுள்ள கலைஞர் நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நூலகம், அறிவுசார் மையத்திற்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 1000 ஒருகால பூஜைத் திட்ட கோயில்களுக்கான ஆணைகளை 10 அர்ச்சகர்களிடம் வழங்கினார்.
-
Mar 21, 2025 10:15 IST
ஏழுமலையான் கோயிலில் பாடகர் மனோ தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகரும், பாடகருமான மனோ குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.கலைத்துறையில் உள்ள அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டதாக பேட்டி அளித்துள்ளார்.
-
Mar 21, 2025 10:14 IST
மேட்டுப்பாளையம் - எஸ்டிபிஐ நிர்வாகி கைது
மேட்டுப்பாளையத்தில் எஸ்டிபிஐ நிர்வாகி ரகுமான் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்காக டெல்லி அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் வீடு, கடைகளில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
-
Mar 21, 2025 10:10 IST
திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம்
மதுரை திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டி தரப்படும் என அமைச்சர் கே.என் நேரு பதில் அளித்துள்ளார்.
-
Mar 21, 2025 10:08 IST
திருப்பூரில் சட்டக்கல்லூரி?
நிதிநிலைக்கு ஏற்ப திருப்பூரில் சட்டக்கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் எம்.எல். ஏ செல்வராஜ் எழுப்பிய கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
-
Mar 21, 2025 09:34 IST
ஹவாலா பணம் பறிமுதல்
கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ₹71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
Mar 21, 2025 09:33 IST
பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு
மதுரையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
-
Mar 21, 2025 09:33 IST
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1087 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
Mar 21, 2025 09:12 IST
வாகன சோதனையில் ரூ. 71.50 லட்சம் பறிமுதல்
கோவையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு செல்லும் பேருந்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 71.50 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பணத்தை கொண்டு சென்ற சிவபிரகாஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.