/indian-express-tamil/media/media_files/2024/10/25/aavWP9JWjvl4e0j4BGfP.jpg)
10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:
இன்றைய தினம் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Mar 22, 2025 20:23 IST
மோசமான வானிலை: கோவையில் தரையிறங்கிய 7 பெங்களூர் விமானங்கள்
பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய 7 விமானங்கள், மோசமான வானிலை காரணமாக கோவைக்கு திருப்பி விடப்பட்டன. பயணிகள் தரை இறங்க முடியாமல் தவித்த நிலையில், மும்பை, விசாகப்பட்டினம், துாத்துக்குடி, போர்ட் லுாயிஸ், சிலிகுரி, டெல்லி ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்ட விமானங்கள் கோவை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
-
Mar 22, 2025 18:49 IST
பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் - வனத்துறை எச்சரிக்கை
கடலூர் பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் பலம் வருவதால் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Mar 22, 2025 18:42 IST
விழுப்புரம்: கல்லூரி வேன் மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்து
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரின் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளைவு திரும்ப முயன்ற கல்லூரி வேன் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியதில் வேன் கவிழ்ந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் காயமடைந்துள்ளனர்
-
Mar 22, 2025 17:39 IST
விழுப்புரம்: மருத்துவமனை மீது கல்வீசித் தாக்குதல்
விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடிருந்த நபர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனை மீது உறவினர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
-
Mar 22, 2025 17:30 IST
கோவை தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட 1,400 மரங்கள்!
மேட்டுப்பாளையம் - அவிநாசி இடையே 35 கி.மீ. தூரத்திற்கு ரூ.250 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 1,400க்கும் மேற்பட்ட சாலையோர மரங்களை வெட்டும் பணி நடந்து வருகிறது. இதில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களும் அடங்கும். இதனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
-
Mar 22, 2025 16:59 IST
சிறப்பு ரயில் இயக்கம்
மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மறு மார்க்கத்தில் மார்ச் 31ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் புறபடுப்பட உள்ளது.
-
Mar 22, 2025 16:57 IST
இலவசமாக தக்காளி வழங்கிய விவசாயி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயி ஒருவர் இலவசமாக தக்காளி வழங்கினார். 2 லட்சம் ரூபாய் செலவு செய்தால், 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Mar 22, 2025 16:28 IST
ஆற்றில் சண்டையிட்ட முதலைகள்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் இரண்டு ராட்சச முதலைகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட ராட்சத முதலைகள் இருப்பதால் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Mar 22, 2025 16:08 IST
ஜாகிர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜாகிர் உசேன் மகன், தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி வீடியோ வெளியிட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியுடன் கூடிய 2 காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.
-
Mar 22, 2025 15:53 IST
நீலகிரியில் இடியுடன் பெய்த மழை
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பெய்த மழையால், சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
Mar 22, 2025 15:20 IST
நெல்லை: ஜாகிர் உசேன் குடும்பத்தினர் திடீர் போராட்டம்
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை சம்பவத்தை தொடர்ந்து,பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் திடீர் போராட்டத்தில் குதித்தனர். மேலும் போலீசாருடன் ஜாகிர் உசேன் குடும்பத்தினர் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ரோந்து பணி, கண்காணிப்பை பலப்படுத்துவதாக உறுதி அளித்துள்னர்.
-
Mar 22, 2025 14:37 IST
இலை அறுப்பவரை மட்டையால் முடித்த ஐவர்.. அதிரவிடும் காரணம்
முசிறி அருகே பைக் திருடியதாக கூலி தொழிலாளியை அடித்துக்கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், பெரியபள்ளிபாளையம் பகுதியில் கடந்த 15-ம் தேதி வாழை இலை அறுக்கும் கூலி தொழிலாளி சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் அறிவழகன் என்பவரின் பைக்கை திருடியதாக,சிவா,அறிவழகன் உள்ளிட்டோர் சேர்ந்து சுரேஷை தென்னை மட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் போலீசார் தலைமறைவாக இருந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
-
Mar 22, 2025 14:21 IST
அடுத்த டார்கெட் நான் தானா? - ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலி குற்றச்சாட்டு
"மர்ம நபர்களால் நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். இன்று ஹெல்மெட் அணிந்து வந்த நபர் எங்களது வீட்டை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அடுத்த டார்கெட் நான் தானா என எண்ண தோன்றுகிறது. சாவை நினைத்து நாங்கள் பயப்படவில்லை, அதற்கு பிறகு உள்ள பொறுப்பை நினைத்தே பயப்படுகிறோம்.” - ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலி குற்றச்சாட்டு
-
Mar 22, 2025 13:33 IST
ரவுடி படுகொலை - பதற வைக்கும் சம்பவத்தின் காட்சி
ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட ரவுடி மனோஜ். 3 பேர் கைது. மேலும் மூவரை தேடி வரும் தனிப்படை போலீசார்
-
Mar 22, 2025 13:12 IST
இன்றைய வானிலை அப்டேட்!
கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 22) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் கணிப்பு
-
Mar 22, 2025 12:51 IST
வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு - அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் பாக்கம்பாடி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு. வனப்பகுதியில் வேட்டையாட சென்ற 3 பேரை வனக்காப்பாளர் பிடிக்க முயற்சித்த போது காலில் பாய்ந்த குண்டு
-
Mar 22, 2025 12:33 IST
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை
ஈரோடு அருகே ஓடும் ரயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ரயில்வே ஒப்பந்த ஊழியர் சிக்கினார். புனே-கோவை இடையே செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ரயில்வே ஒப்பந்த ஊழியர் நவீதம் சிங் சிக்கினார்
-
Mar 22, 2025 12:15 IST
“மினி பேருந்து திட்டம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது” – அமைச்சர் மூர்த்தி பேட்டி!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 36 புதிய பேருந்துகளை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்,
-
Mar 22, 2025 09:38 IST
மாநகராட்சி ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
கடலூரில் மாநகராட்சி ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி செலுத்த கால அவகாசம் இருந்தும், கடப்பாரையுடன் ஒவ்வொரு வீடாக சென்று உடனடியாக பணம் செலுத்துமாறு மிரட்டுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
-
Mar 22, 2025 07:13 IST
இன்று கனமழைக்கு வாய்ப்பு
இன்று (மார்ச் 22) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.