/indian-express-tamil/media/media_files/2025/04/08/lgueiTe2OuDLKOQCKSQE.jpg)
மாவட்ட தலைநகரங்களில் வி.சி.க போராட்டம்:
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார்.
-
Apr 08, 2025 19:49 IST
பூட்டிய வீட்டில் சடலங்கள் மீட்பு: கோவை போலீசார் விசாரணை
கோவையை அடுத்த துடியலூரில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரே வீட்டில் சடலமாக இருந்த பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை உரிமையாளர்கள் இருவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 08, 2025 18:31 IST
தருமபுரியில் இளைஞர் சந்தேக மரணம்: மறுபிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவு
தருமபுரியில் யானை வேட்டையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் அடைந்த விவகாரத்தில் சடலத்தை மறுபிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 3 பேர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
Apr 08, 2025 16:26 IST
4 மாவட்டங்களில் நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் ரூ. 69 கோடி மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
Apr 08, 2025 14:33 IST
கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்ட விவகாரம் - ஒருவர் கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்ட விவகாரம், தலைமறைவாக இருந்த கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த கமல் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 08, 2025 14:26 IST
NIGHT SKY WATCH-க்கு சிறப்பு சேவை!
கொடைக்கானல்: வான் இயற்பியல் மையம் சார்பில் இரவில் வான்வெளி அண்டத்தை மக்கள் காணும் வகையில், சுற்றுலா சேவை தொடக்கம். ஏப்ரல் 11, 12 ம் தேதிகளில் மாலை 7 முதல் 9 மணி வரை வானில் தென்படும் வியாழன் கோள் மற்றும் நிலவை காண ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிப்பு; புகைப்படத்தில் உள்ள QR Codeஐ ஸ்கேன் செய்து மக்கள் முன்பதிவு செய்யலாம்
-
Apr 08, 2025 13:38 IST
மின்சாரம் தாக்கி +2 மாணவர் உட்பட இருவர் பலி
திருவண்ணாமலை அருகே பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி +2 மாணவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மணலூர்பேட்டையில் நண்பரின் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலியானதால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் ஊர் மக்கள்
-
Apr 08, 2025 13:18 IST
6 ஆதாரங்களை சீமானிடம் ஒப்படைக்க உத்தரவு
அவதூறு வழக்கில் 6 ஆதாரங்களை சீமானிடம் ஒப்படைக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு வழக்கு தொடர்ந்த டிஐஜி வருண்குமாரும், சீமானும் ஒரே நேரத்தில் திருச்சி | நீதிமன்றத்தில் ஆஜர்; டிஐஜி வருண் குமார் தரப்பில் தாக்கல் செய்த ஆதாரங்களை தங்களுக்கு தர வேண்டும் என சீமான் தரப்பு கோரிக்கை; 6 ஆதாரங்களை சீமானுக்கு வழங்கவும், பெற்ற பிறகு சீமான் கையெழுத்திட்டு விட்டு செல்லவும் நீதிமன்றம் அறிவுரை: திருச்சி சரக டிஐஜி வருண் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு
-
Apr 08, 2025 12:40 IST
ராமநாதபுரம்: 56 கிலோ கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் பகுதியில் உள்ள அய்யனார் கோயில் கடற்கரை பகுதியில் 28 பொட்டலங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கஞ்சா மற்றும் கேட்பாரற்று நின்ற சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Apr 08, 2025 11:29 IST
பழனியில் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் ஏப்.11, 12, 13 ஆகிய 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
Apr 08, 2025 10:48 IST
பங்குச்சந்தை முதலீடு எனக் கூறி ரூ.24 கோடி மோசடி
மதுரையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபன் எனக்கூறி ரூ.24 கோடி மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர்.3 மாதங்களாக முதலீட்டிற்கான லாபத் தொகை வழங்கப்பட்டதை நம்பி முதலீடு செய்து மக்கள் ஏமாந்தனர். ஒவ்வொருவரும் சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இழந்துள்ளதாக ஆட்சியரிடம் புகார் எழுந்துள்ளது.
-
Apr 08, 2025 10:32 IST
வேலூரில் பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி துணை முதல்வர் கைது
வேலூரில் பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி துணை முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரிஸ் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வரும் அன்பழகன் தலைமறைவாக இருந்த நிலையில் ஆந்திர மாநிலம் ராசனபள்ளி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 08, 2025 09:27 IST
கோயில் இடித்து அகற்றம்
விழுப்புரத்தில் 45 ஆண்டுகளாக உள்ள புவனேஸ்வரி அம்மன் கோயில் நகராட்சி மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
-
Apr 08, 2025 09:26 IST
காவலர்களின் மனிதநேய செயலுக்கு குவியும் பாராட்டு
திருச்சி தொட்டியத்தில் நடைபெற்ற காளியம்மன் கோயில் தேர் திருவிழாவின்போது திடீரென பெய்த கனமழையால் கை குழந்தையுடன் ஒதுங்க இடம் இல்லாமல் தவித்ட பெண்ணுக்கு பாதுகாப்பு தடுப்புகளை தலைக்கு மேல் தாங்கி பிடித்து உதவிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
Apr 08, 2025 09:17 IST
ரேஷன் அரிசி கடத்தல் - 2 பேர் கைது
கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட புவனேஸ்வரன், செல்லத்துரை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.