/indian-express-tamil/media/media_files/2025/04/09/vNA3dhCJMLtBQ3poXO5p.jpg)
ரயில் சேவையில் மாற்றம்:
மதுரை மற்றும் திருச்சி கோட்ட ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 09, 2025 20:29 IST
கோவை குற்றாலம் அருவியில் குளிக்க நாளை முதல் அனுமதி
கோவை குற்றாலம் அருவியில் குளிக்க நாளை (வியாழக் கிழமை) வழக்கம் போல அனுமதி. அருவிக்குச் செல்லும் சாலையின் சீரமைப்புப் பணிக்காக இன்று குற்றாலம் அருவி மூடப்பட்டது. சுமார் 2.8 கிலோ மீட்டர் தொலைவிற்கான சாலை சீரமைப்புப் பணிகள் இன்று நடைபெற்று நிறைவடைந்தன. இதையடுத்து நாளை முதல் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
Apr 09, 2025 20:29 IST
கோவை அமேசான் குடோனில் தரச்சான்று இல்லாத பொருட்கள் பறிமுதல்
கோவை: செட்டிபாளையம் பகுதியில் உள்ள அமேசான் குடோனில் ரூ.95 லட்சம் மதிப்பிலான தரச்சான்று இல்லாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆன்லைன் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டில்கள், காற்றாடி, பொம்மைகள், வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட 4,500 பொருட்கள் BIS தரச்சான்று இல்லாமல் இருந்தது கண்டுபிடிப்பு.
-
Apr 09, 2025 19:10 IST
உளுந்தூர்பேட்டை அருகே அரசுப்பேருந்து நடத்துனர் - டிக்கெட் பரிசோதகர் இடையே வாக்குவாதம்
விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி, கெடிலம் பகுதியில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் சண்முகம், பேருந்தில் பயணிகள் குறைவாக இருப்பதாக கூறி, நடத்துனர் சுபாஸ் சந்திர போஸ் உடன் டிக்கெட் பரிசோதகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.திருநாவலூர் காவல் நிலையம் வரை விவகாரம் சென்ற நிலையில், இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக எழுதி கொடுத்தனர் இருந்தபோதும், நடத்துனர் சண்முகத்திற்கு 10 நாட்களாக பணி வழங்காமல் அதிகாரிகள் பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
Apr 09, 2025 19:09 IST
வேலூரில் மீண்டும் சதம் அடித்த வெப்பம்
வேலூர் மாவட்டத்தில் இன்று 101.3 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வேலூரில் நாளை முதல் வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 95.36 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு
-
Apr 09, 2025 16:43 IST
காட்பாடி - திருப்பதி இரட்டை ரயில் பாதை
வேலூர் மாவட்டம், காட்பாடி - திருப்பதி இடையே இரட்டை ரயில் பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ. 1,332 கோடி மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 09, 2025 15:43 IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் காவல் ஆய்வாளர் ஆஜராக உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் காவல் ஆய்வாளர், மருத்துவர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர் தரப்பில் சாட்சிகளை விசாரணை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Apr 09, 2025 15:13 IST
ரூ. 20 லட்சம் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்
கரூர் மாவட்டத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்றதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
Apr 09, 2025 14:54 IST
பைக் மீது கார் மோதி விபத்து - 2 பேர் பலி
பைக் மீது கார் மோதிய வேகத்தில் 100மீ தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற இனோவா கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 09, 2025 14:49 IST
குடிநீர் குழாயில் மோதி பேருந்து விபத்து
டூவீலரில் மோதாமல் இருக்க அரசு பேருந்தை திருப்பியதில், குடிநீர் குழாயில் மோதி விபத்துக்குளானது பேருந்து. தரைப்பாலத்தின் சுவற்றில் பேருந்து மோதியதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
-
Apr 09, 2025 14:35 IST
திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
சமயபுரம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை ஒட்டி வரும் 15ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த மாதம் 3ம் தேதி வேலைநாள்.
-
Apr 09, 2025 13:17 IST
2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 09, 2025 13:14 IST
காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற 2 சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு
தஞ்சாவூர்: நடுகாவிரி காவல்நிலையம் முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்க கோரி தற்கொலைக்கு முயன்ற 2 சகோதரிகளில் ஒருவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கீர்த்திகா(29), மேனகா(31) ஆகியோர் காவல்நிலையம் முன்பு விஷம் குடித்தனர்; சிகிச்சை பலனின்றி சகோதரி கீர்த்திகா உயிரிழப்பு; மற்றொரு சகோதரி மேனகா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Apr 09, 2025 12:41 IST
கோவை குற்றாலம் செல்ல அனுமதியில்லை - வனத்துறை
கோவை குற்றாலத்தில் சாலைப் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் வந்து ஏமாற வேண்டாம் என வனத்துறை அறிவித்துள்ளது.
-
Apr 09, 2025 12:39 IST
அண்ணனை விடுவிக்கக் கோரி தங்கைகள் தற்கொலை முயற்சி
தஞ்சையில் காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தங்களது அண்ணனை விடுவிக்கக் கோரி தங்கைகள் இருவர் காவல்நிலையம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில், தங்கை கீர்த்தி பலியான நிலையில், அக்கா மேனகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
Apr 09, 2025 12:28 IST
தொண்டையில் மீன் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞரின் தொண்டையில் மீன் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீன் பிடிக்க சென்றபோது, உயிருடன் இருக்கும் மீனை வாயில் வைத்திருந்தபோது, அந்த மீன் அவரது தொண்டகைக்குள் சென்று சிக்கி உள்ளது. இதனால், அந்த இளைஞர் மூச்சுவிட முடியாமல் உயிரிழந்துள்ளார்.
-
Apr 09, 2025 12:15 IST
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவி்ழாவை ஒட்டி 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
-
Apr 09, 2025 11:27 IST
ஆம்னி வேன் சுவரில் மோதிய விபத்தில் ஓட்டுநர் பலி
கோவை சின்ன தடாகம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், சுவரில் மோதிய விபத்தில் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியதில் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 09, 2025 11:09 IST
மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ல தடை
கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து மண்டல பூஜை தொடங்கி உள்ளது. தினமும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. இதில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனை, வழிபாடு செய்யப்படுகிறது இந்த பூஜை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு என விஷேச நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை உள்ளதால் மருதமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை மலைப்பாதை வழியாக 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. 2 சக்கர வாகனங்கள் மூலமாகவும், படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் மூலம் இயக்கப்படும் பஸ்களிலும் கோயிலுக்கு சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
-
Apr 09, 2025 09:38 IST
முத்துமாரியம்மன் கோயில் பெருவிழா - சாமியாடியபடி அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்
புதுக்கோட்டை புளிச்சங்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்தது மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து சாமியாடினர்.
-
Apr 09, 2025 09:32 IST
தொடர் விடுமுறை சிறப்பு பேருந்து அறிவிப்பு
தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,680 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
-
Apr 09, 2025 09:20 IST
செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்
செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ரயில் (எண். 16848) நாளை (ஏப்ரல் 10) விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் வழக்கமான பாதையான மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.